கடந்த ஐந்து வருடத்தில் எப்படியாவது ப.சிதம்பரத்தை ஒரு நாளாவது சிறையில் அடைத்துவிட வேண்டும் என்று பா.ஜ.க. அரசு எத்தனையோ முயற்சிகள் எடுத்தது.
சீமான் சிதம்பரத்தை ஏன் வாட்டியெடுத்தார் எடப்பாடி? பா.ஜ.க.வின் அசைன்மென்ட் காரணமா?

ஆனால், சட்டத்தின் ஓட்டைகளைத் தெரிந்துகொண்டு இதுவரை கைதாகாமல் தப்பித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காஷ்மீர் போன்று தமிழகமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்படும் என்றும், அப்படி நடந்தாலும் எடப்பாடி சந்தோஷமாக சம்மதிப்பார் என்றும் தெரிவித்து இருந்தார்.
உடனே இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு கொந்தளித்துவிட்டார் எடப்பாடி. இதுவரை சிதம்பரம் தமிழகத்துக்கு ஏதேனும் நல்லது செய்திருக்கிறாரா? இவர் எப்படி பேசலாம்? இவர் இருப்பதே பூமிக்குப் பாரம் என்பது போல் திட்டித் தீர்த்துவிட்டார்.
வழக்கமாக இப்படியெல்லாம் பேசுவது எடப்பாடியின் குணம் இல்லையே, பிறகு ஏன் இப்படி செய்தார் என்று விசாரித்தால், இதற்குப் பின்னே பா.ஜ.க. இருக்கிறதாம். சிதம்பரம் பேசியதுமே, கடுமையாக பதிலடி கொடுக்கும்படி மேலிடத்தில் இருந்து தகவல் சொல்லப்பட்டதாம். அதனால்தான், கடுமையாக பேசினாராம் எடப்பாடி.
அதான பார்த்தோம்.