கொங்கு மண்டலம் எடப்பாடியை ஏன் கைவிட்டது தெரியுமா? உளவுத்துறை செம ஹாட் ரிப்போர்ட்!

கொங்கு தங்கம் என்றுதான் எடப்பாடி பழனிசாமியை பெருமையாக சொல்லிக்கொள்கிறார்கள். அவரும் வாரம் தவறாமல் சேலத்துக்குப் போய் ஏகப்பட்ட நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். எல்லாம் சரிதான், ஆனால், கொங்குவில் ஓட்டுக்கள் அத்தனையும் காணாமல் போச்சே எப்படி என்று தெரியாமல் விழிக்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.


எப்போதுமே கொங்கு அதிமுகவின் கோட்டைதான். எடப்பாடி முதல்வர் என்பதா கொங்கு பகுதியில் இருக்கும் அத்தனை கொங்கு வேளாளக் கவுண்டர்களின் ஆதரவும் அதிமுக கூட்டணிக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. எப்படி இருந்தாலும் இந்தக் கூட்டணி தோற்க வாய்ப்பே இல்லை என்றே அரித்மேடிக் எனப்படும் கணக்குகள் காட்டின.

எடப்பாடி கொங்கு வேளாள மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தங்கள் வாழ்விடங்களில் இருந்து பந்தாடப்படும் அருந்ததிய மக்களும் அதிமுகவைப் புறக்கணித்தது போலத்தான் தெரிகிறது. பெண்களிடம் ஜெயலலிதாவுக்கும், எம்ஜிஆருக்கும் இருந்த செல்வாக்கு இப்போது போயே போய்விட்டது. புதிய வாக்காளர்கள் நாம் தமிழர், மையம், என்றே வாக்களித்திருக்கின்றனர்.

பிஜேபி வாக்குகளை கமல் பிரித்து விட்டார். அதிமுக வாக்குகள் திமுகவுக்கும், அமமுகவுக்கும் போய்விட்டது போலத் தெரிகிறது.  சிபிஎம் அளவுக்கு இல்லாவிட்டாலும் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளதும் பெரிய சரிவுதான். 50 சதவீத வாக்குகளை இழந்ததை அவ்வளவு எளிதில் சரி செய்துவிட முடியாது.

எல்லாவற்றுக்கும் காரணம் அந்த எட்டு வழிச் சாலையும், பொள்ளாச்சி பொம்பளை விவகாரமும்தான் என்று உளவுத் துறை இப்போது ரிப்போர்ட் கொடுத்திருக்கிறதாம். ஆக, இனிமேலும் கொங்கு கை கொடுக்குமா என்பது எடப்பாடிக்கு சந்தேகம்தான்.