ஸ்டாலினுக்கு ஆதரவாக ஏன் பேசினார் திவாகரன்..? இப்படியும் ஒரு எஸ்கேப் பாலிஸியா?

எடப்பாடி ரொம்பவும் நல்லவர், நான் அவர் ஆட்சியை கொஞ்சமும் குறை சொல்லவே இல்லை என்று வெளிப்படையாகச் சொன்னவர் சசிகலாவின் அருமை சகோதரர் திவாகரன்.


கடந்த உள்ளாட்சித் தேர்தலில் எப்படியும் எடப்பாடியுடன் சேர்ந்து, தன்னுடைய அண்ணா கட்சிக்கு நாலைந்து இடமாவது பெற்றுவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில்தான் திருமண வீட்டுக்கு வந்த ஸ்டாலின், உதயநிதியை சந்தித்துப் பேசியது மட்டுமின்றி, மேடை ஏறி, அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான் என்று சொல்லியிருக்கிறார். இந்த விவகாரம்தான் இப்போது அரசியல் மேடையில் செம ஹாட்.

ஏன் இப்படி பேசினாராம் திவாகரன்? ‘‘அண்ணனை எடப்பாடி கொஞ்சமும் மதிக்கவே இல்லை. தினகரனும் மதிக்கலை, சசிகலாவும் மதிக்கலை. இப்படி யாருமே மதிக்கலைன்னா வேற என்னதான் செய்வார்? இதைவிட இன்னொரு விஷயம் இருக்கு. அடுத்து தி.மு.க.தான் ஆட்சிக்கு வரும் என்பதில் உறுதியாக இருக்கிறார் திவாகரன்.

அதனால் இப்போதே ஸ்டாலினை ஐஸ் வைத்துக்கொண்டால், அடுத்த ஆட்சியிலும் பிரச்னை இல்லாமல் வண்டியோடும். தேவை என்றால் காரியங்களும் சாதித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறார். அதனால்தான் திடீர் ஜால்ரா’’ என்கிறார்கள்.

அடேங்கப்பா பாலிடிக்ஸ்தான் இது.