ஏழ்மையான ஆப்பிரிக்க நாடுகளை ஏன் தாக்கவில்லை கொரோனா..?

சீனாவில் தொடங்கி இத்தாலியை சூறையாடிய கொரோனா இப்போது அமெரிக்காவை பதம் பார்த்துவருகிறது.


சுருக்கமாகச் சொல்வது என்றால், மருத்துவ ரீதியாகவும், சுகாதார ரீதியாகவும் மிகவும் முன்னேறிய நாடுகளான சீனா, இத்தாலி,ஸ்பெயின் , பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளையே கொரோனா குதறியிருக்கிறது.

ஏழ்மை நிலையில் இருக்கும் ஆப்ரிக்காவைப் பொருத்தவரை பாதிப்பே இல்லை எனலாம். மிகவும் வளர்ச்சியடைந்த சாதாரண நோய்களுக்கு மிகக்குறைவான மருந்துகளையே எடுக்கும் ஐரோப்பிய நாடுகளையே கொரோனா குதறி எடுத்து விட்டது.

ஓரளவு வளர்ச்சியடைந்த ஆனால் யுத்தங்களால் சிதைக்கப்பட்ட மத்திய கிழக்கில் ஈரான், அதற்கடுத்து துருக்கி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று இப்போதுதான் தெரியவந்திருக்கிறது. 

தட்ப வெப்பம், சுற்றுச்சூழல் போன்றவையும் கொரோனா பாதிப்பில் முக்கிய பங்காற்றுவதாக சொல்லப்படும் நிலையில், ஏழை நாடுகளை ஏன் பாதிக்கவில்லை என்பதையும் மருத்துவ விஞ்ஞானிகள் கணக்கில் எடுத்துக்கொண்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

அப்போதுதான், கொரோனா பற்றிய ஆய்வு முழுமையடையும், பாதிப்புகளில் இருந்து மீளும் வழியும் கிடைக்கலாம்.