காலை எழுதவுடன் காபி அல்லது டீ கண்டிப்பா குடிக்க கூடாதாம்! ஏன்?

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் அல்லது நீராகாரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பருகி ஆரோக்கிய வாழ்வுக்கு வித்திடுங்கள்..


காபியை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

காபியைப் போலவே டீயிலும், காப்ஃபைன் உள்ளதால், இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். சொல்லப்போனால் டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால், இதனைக் குடித்த பின் இது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.

அதுபோலவே தயிரிலும் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.