தண்ணீர் அரசியல்! கேரளாவை விரட்டும் எடப்பாடி ஆந்திராவை வளைப்பது ஏன் தெரியுமா?

இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘கேரள முதல்வர் ஒரு நாளுக்கு மட்டும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்குவதாகக் கூறினார்.


தினமும் வழங்குவதாகக் கூறவில்லை. தண்ணீர் தருவதாக கூறிய முதல்வருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் கொடுத்தால் தமிழக மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’ என்று கூறினார். ஒரு நாள் என்பதாலே தண்ணீர் வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

இதற்கு வேறு ஒரு காரணமும் சொல்கிறார்கள். கேரளாவில் இருந்து தண்ணீர் வாங்கினால், முல்லைபெரியாறில் கேரளா நீர் கொடுக்காமல் போகலாம் என்கிறார்கள். இதுதவிர கேரளா எங்களுக்கு உதவுவதாக இருந்தால், முல்லைபெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்தினால் போதும் என்று தெரிவித்து இருக்கிறார்.

அதே நேரம், ஆந்திர அரசிடம் 2 டிம்சி தண்ணீருக்காக தமிழக அரசு பேசிகொண்டிருக்கின்றது. ஆனால் இரண்டு டிஎம்சி நீரின் விலை 20 கோடி ரூபாய் என்ற விலையில் பேசுவதாக தகவல் கசிகிறது. ஆந்திராவிலிருந்து வாங்கும் தண்ணீருக்கு பணம் கொடுக்கிறேன் என்பது போல், கேரளாவிலும் சொன்னால், அவர்களும் தினமும் கொடுக்கத்தானே செய்வார்கள்.

அப்படியிருக்க கேரளாவிற்கு தடை போட்ட தமிழகம் ஆந்திராவில் மட்டும் கையேந்துவது ஏன்? அங்குதான் பண விவகாரம் வருகிறது. பணம் இல்லாமல் எந்தக் காரியமும் இந்த ஆட்சியில் நடக்காதோ என்னமோ...?