குடியுரிமை திருத்த சட்டத்தை சீக்கியர்கள் எதிர்ப்பது ஏன்? ஆச்சர்ய காரணம்!

மோடியின் அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு முழுவதும் இஸ்லாமிய மக்களும், மாணவர் அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இந்த சட்டத்தை அமல் படுத்தப்போவதில்லை என்று மம்தா பானர்ஜி உறுதியுடன் தெரிவித்து இருக்கிறார். அதேபோன்று எதிர்க் கட்சிகள் அத்தனையும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் இந்த சட்டத்தை வேடிக்கை பார்க்கிறார்கள். ஏனென்றால், இந்துக்களுக்கு மட்டுமே ஆதாயம் தரும் சட்டம் இது. இந்த நிலையில், இந்த மசோதாவினால் எந்த பாதிப்பும் இல்லாத சீக்கியர்களும் எதிர்ப்பு காட்டுவதுதான் ஆச்சர்யம்.

ஆம், இந்த சட்டத்தை எதிர்க்கும் வகையில் சீக்கிய மக்கள் வியக்கத்தக்கஓற்றுமை காட்டுகிறார்கள். இத்தனைக்கும் இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் சீக்கிய மக்களுக்கும் குடியுரிமை அளிக்க வகை செய்கிறது.

அதுசரி, ஏன் எதிர்க்கிறார்கள்? இன்று இஸ்லாமியர்களுக்குப் பாரபட்சம் காட்டப்படுகிறது என்பதாலே இந்த சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்கின்றனர். இன்று ஒரு சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களை நாசமாக்குவதை ஆதரித்தால், நாளை அது இன்னொரு சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த சீக்கியர்களுக்கும் நடக்கும். இதை எதிர்த்து நிற்போம் என்கின்றனர் சீக்கிய மக்கள்.

ஆனால் ஈழத் தமிழர்களுக்கு இந்த சட்டம் பெரும் சிக்க்லை ஏற்படுத்துகிறது என்று தெரிந்தாலும் அமைதி காக்கிறானே, தமிழன்டா..!