சாத்தான்குளம் விவகாரத்துக்கு சி.பி.ஐ. எதற்காக..? தூத்துக்குடி,குட்காவுக்கு அடுத்து சாத்தான்குளமா..? கொந்தளிக்கும் கமல்ஹாசன்.

சாத்தான்குளம் சம்பவத்தை சட்டென்று முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், எடப்பாடி பழனிசாமி, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.


நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு தொடங்கி, தூத்துக்குடி துப்பாக்கி சூடு வரையிலும், சி.பி.ஐ. செயல்பாடு உருப்படியாக இல்லை என்பதுதான் உண்மை.

நான்கு நாட்களில் முடிக்கவேண்டிய விவகாரத்தை இழுத்தப்படிப்பதற்காக சி.பி.ஐ. வசம் இந்த கேஸை ஒப்படைத்ததாக பலரும் கூறிவரும் நிலையில், சாத்தான்குளம் வழக்கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே என்று ஆவேசம் காட்டியிருக்கிறார் கமல்ஹாசன். 

‪குற்றவாளிகள் மேல் IPC 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள். CBI விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, 

மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திராமல், நீதியைக் காத்திடுங்கள். ‬‪காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி என்று குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்.