கொல்கத்தாவில் நிதி நிறுவன முறைகேடு வழக்குகளில் காவல்துறை ஆணையரிடம் விசாரணைக்காகச் சென்ற 5 சி.பி.ஐ. அதிகாரிகளை கைது செய்து அதிரடி காட்டினர்.
விடிய விடிய நடு ரோட்டில் அமர்ந்து தர்ணா! மம்தா போராட்டத்தால் பரபரப்பு!

சாரதா மற்றும் ரோஸ்
வேலி நிதிநிறுவன முறைகேடுகளில் சில ஆவணங்கள் காணாமல் போயிருப்பதாகவும், அது
தொடர்பாக காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதாகவும்
சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில்
ஞாயிற்றுக்கிழமை லவுடன் தெருவில் உள்ள காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டுக்கு வந்த
சி.பி.ஐ. அதிகாரிகளை காவல் ஆணையரின் வீட்டு வாயிலில் இருந்த காவலர்களும்
போலீசாரும் தடுத்து நிறுத்தினர்.
அப்போது அங்கு வந்த
உயர் அதிகாரிகள் காவல் ஆணையரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகளிடம் உரிய
ஆவணங்கள் உள்ளதா என விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் சி.பி.ஐ.
அதிகாரிகளை போலீசார் ஷேக்ஸ்பியர் சரணி சாலை காவல் நிலையத்துக்கு வலுக்கட்டாயமாகக்
கொண்டு சென்றனர். எனினும் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
செய்தியாளர்களிடம்
பேசிய சி.பி.ஐ. அதிகாரிகள், இது குறித்து தாங்கள் பேசவிரும்பவில்லை என்றும்
என்னதான் நடக்கிறது பார்க்கலாம் என்று மட்டும் தெரிவித்தனர்.
இந்நிலையில் தகவல்
அறிந்து காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா
பானர்ஜி வந்தார். மாநில காவல் துறை தலைவர் மற்றும் நகர் மேயர் ஆகியோரும் அங்கு
வந்தனர். காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினரை மிரட்டி கட்டுப்பாட்டுக்குள் வைக்க
பா.ஜ.க. அரசு சி.பி.ஐ.யை பயன்படுத்துவதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
இதனிடையே சி.பி.ஐ.யின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சி.பி.ஐ அதிகாரிகள் தான் போலீசாரை கதறவிடுவார்கள்.ஆனால் மம்தாவின் கொல்கத்தாவிலோ சி.பி.ஐ அதிகாரிகளை போலீசார் கதறவிட்டுள்ளனர்.