ஏன் தமிழகத்தில் பார்ப்பனர்கள் மட்டும் கைது செய்யப்படுவதில்லை? கேள்வி எழுப்பும் அப்பாவி குடிமகன்!

மத்திய அரசை விமர்சனம் செய்தார் என்றோ மோடியை கிண்டல் செய்து கருத்துப் படம் போட்டார் என்றோ அவ்வப்போது நாடு முழுவதும் பலரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.


ஆனால், ஏன் பார்ப்பனர்கள் மட்டும் யாரை திட்டினாலும் அவர்களை போலீஸ் கைது செய்வதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஓய்வுபெற்ற நீதிபதி பரஞ்சோதி.

* சுவாதி படுகொலையில் முஸ்லிம்கள் மீது அவதூறு பேசி சட்டம் - ஒழுங்கு கெடுவது போல கருத்துச் சொன்ன ஒய்.ஜி.மகேந்திரன் கைது செய்யப்பட வில்லை.

* தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ்சை ஆண்மையற்றவர்கள் என்று சொன்ன 'துக்ளக்' குருமூர்த்தி கைது செய்யப் படவில்லை.

* காவல் துறையினரிடமே 'அய்கோர்ட்டாவது மயிராவது' என்று சொல்லி சட்டத்துக்குப் புறம்பாகப் பேசிய எச்.ராஜா கைது செய்யப்படவில்லை.

* பெண் பத்திரிக்கையாளர்களை கீழ்த்தரமாகவும், அவ தூறாகவும் பேசிய எஸ்.வி.சேகர் கைது செய்யப் படவில்லை.

* பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற சனாதன முறையை நியாயப்படுத்தியும், நாயையும் மனிதர் களையும் இணைத்தும் ஜாதி வெறியோடு கருத்துச் சொன்ன வெங்கடகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்படவில்லை.

* சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணின் கன்னத்தில் அடித்த தீட்சிதர் தர்ஷன் இதுவரை கைது செய்யப் படவில்லை.

* விசிக தலைவர் திருமாவளவனை 'செருப்பால் அடிக்க வேண்டும்' என்று வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசிய நடிகை காயத்ரி ரகுராம் கைது செய்யப்படவில்லை.

இவர்கள் அனைவரும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு கொண்ட பார்ப்பன சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இதே பாஜக, ஆர்.எஸ்.எஸ்-சுடன் தொடர்பு உள்ள பார்ப்பனரல்லாத கல்யாணராமன் போன்றவர்களை எல்லாம் மிகவும் இலகுவாக கைது செய்யும் அரசு இயந்திரம் பார்ப்பன சமுதாயத்தை சேர்ந்த ஒருவரைக் கூட கைது செய்ய முடியவில்லை. அவர்கள் குற்றமிழைத் துள்ளனர் என்று தெளிவாகத் தெரிந்தும் அவர்கள் கைது செய்யப்படுவதில்லை.

இந்த உண்மைகள் எல்லாம் இவ்வளவு தெளிவாகத் தெரிந்தும் விட்டில் பூச்சிகளாக அவர்களிடம் பலியாகின்றனர் பார்ப்பனரல்லாத அப்பாவி மக்கள்.