முருகானந்தத்தை அமித் ஷா எதற்காக அழைத்தாராம்? என்னப்பா நடக்குது பா.ஜ.க.வில்?

இப்போது டெல்லிக்குப் போகும் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் அனைவருமே ஏதோ ஒரு கனவில்தான் மிதக்கிறார்கள்.


மாநிலத்துக்குத் தலைமை இல்லாத காரணத்தால் அடுத்த தலைவர் நான் என்று கம்பு சுற்றிவருகிறார்கள். ஏற்கெனவே நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு வந்தது என்று ஓடிப் போனார். அதேபோன்று வாசனை டெல்லியில் வைத்து செமையாக கவனித்து அனுப்பினார்கள்.

ரஜினிகாந்த் தொடங்கி லோக்கல் நாராயணன் வரையில் தலைவர் பதவிக்குப் பெயர் அடிபடுகிறது. இந்த நிலையில் இன்று தமிழக பாஜக தலைவராக ஏ.பி.முருகானந்தம் நியமிக்கப்பட உள்ளார் என்று ஒரு செய்தி பரவியது.  கோவையைச் சேர்ந்த ஏ.பி.முருகானந்தம் டெல்லிக்கு அமித்ஷா அழைப்பின் பேரில் பயணம் மேற்கொண்டுள்ளாராம்.

பாஜக தலைவராக நியமிப்பது பற்றி ஏ.பி.முருகானந்தம் கருத்தை கேட்க அமித்ஷா முடிவு செய்ய உள்ளார். தமிழ்நாடு பாஜக துணை தலைவராக ஏ.பி.முருகானந்தம் இருந்து வருகிறார் என்பதால், அவரையே தலைவராக நியமிக்க வாய்ப்பு அதிகம் என்று சொல்லப்படுகிறது.

இதையெல்லாம் யாருப்பா சொல்றது என்று கேட்டால், ஏபி.முருகானந்தமே சொன்னாராம். அடப் போங்கப்பா. வானதிக்குத்தான் வாய்ப்புன்னு நிர்மலா சீதாராமன் உறுதியா இருக்காங்களாம்.