ஊரக உள்ளாட்சியில் உண்மையில் ஜெயித்தது யாருங்க? ஏன் அ.தி.மு.க. தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்குகிறது?

நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வை விட தி.மு.க. அதிக இடங்களில் வென்றுள்ளதாக ஆதாரபூர்வமாக தேர்தல் கமிஷன் அறிவிப்பு செய்தாலும், இல்லவே இல்லை என்று சாதிக்கிறது அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் சம பலம் என்று சொல்கிறார்கள்.


இதுகுறித்து மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் வெற்றியில் 214ம் 243ம் எப்படி சமபலம்? மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் வெற்றியில் 1781ம் 2100ம் எப்படி சமபலம்? என்று கேள்வி எழுப்புகிறது தி.மு.க.

திமுகவின் வெற்றி என்பது அ.தி.மு.க.வின் கண்களுக்கு தெரியவில்லையா? அவர்கள் சொல்வதை ஏன் ஊடகங்களும் பத்திரிகைகளும் அப்படியே பிரசுரம் செய்கின்றன என்று கேள்வி எழுப்புகின்றன. 

தமிழக ஊரக உள்ளாட்சி முடிவுகள் தெளிந்த நீரோடையாக மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை காட்டுகின்றன.. அதிகாரமும், பணபலமும் இல்லை என்றால் அதிமுக 10 சதவீதத்திற்கும் குறைவாக மட்டுமே இடங்களை பெற்றிருக்கும் என்பது ஆணித்தரமான உண்மை என்கிறது தி.மு.க.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.