பாஜக தேர்தல் அறிக்கையை வரவேற்றதன் திடுக் பின்னணி! ரஜினியை மிரட்டியது யார்?

புதுப்பட பூஜைக்கு ஏற்கெனவே நாள் குறித்துவிட்டதால், எதுவும் பேசிவிடாமல் தப்பிவிடத்தான் ரஜினி திட்டமிட்டிருந்தாராம்.


ஆனால், அவர் பூஜைக்குக் கிளம்புவதற்கு முதல் நாளே டெல்லியில் இருந்து அமித் ஷா பேசியதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையைத் தீர்ப்பவர்களுக்குத்தான் வோட்டு போடவேண்டும் என்று நீங்கள் சொன்னதால்தான் கங்கை காவிரி இணைப்பு பற்றி தேர்தல் அறிக்கையில் வெளியிட்டோம். அதனால் உங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, ரஜினியின் பதிலைக் கூட கேட்காமல் கட் செய்யப்பட்டதாம்.

அதனால் வேறு வழியில்லாமல் வீட்டுக்கு வெளியே வந்த ரஜினி, நதிநீர் இணைப்பு ரொம்ப நல்ல திட்டம் என்று மட்டும் சொல்லி ஜகா வாங்கிவிட்டார். ஆனால், நதி நீர் இணைப்பு என்பது எத்தனை பெரிய மோசடி, முடியாத விஷயம் என்பது ரஜினிக்கும் தெரியும் என்பதுதான் உண்மை.

ஏனென்றால் இன்று ஒரு மாநிலத்துக்கு உள்ளேயே நதிகள் இணைப்பு சாத்தியமில்லை. எட்டு வழி சாலைக்கு இடம் எடுத்தாலே சண்டைக்கு வருகிறார்கள். நீதிமன்றம் தடை போடுகிறது. இந்த லட்சணத்தில் கங்கையும் காவிரியையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்றால், இடையில் உள்ள அத்தனை மாநிலங்களும் சம்மதிக்க வேண்டும்.

அத்தனை மக்களும் ஒப்புக்கொள்ள வேண்டும். இது எல்லாம் நடக்கவே நடக்காத காரியம். இது தெரிந்துதான்1 கோடி ரூபாய் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டார் ரஜினி. அதே விஷயத்துக்காகத்தான் இப்போது பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் ரஜினி.

இதை பார்க்கும்போது சீமான் சொல்வதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. ரஜினி நல்ல நடிகர் ஆனால், அவரை இயக்குவது மோடி என்று சொல்லியிருக்கிறார். அதேபோல் ரஜினிக்கு தலைக்கு வெளியேயும் ஒன்றும் இல்லை, உள்ளேயும் ஒன்றும் இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

இதுவே முந்தைய நாட்கள் என்றால் இந்த நேரம் சீமானை சின்னாபின்னமாக்கியிருப்பார்கள் அவரது ரசிகர்கள். ஆனால், இன்று அவர்கள் அனைவரும் அமைதியாகிவிட்டார்கள். ஏனென்பது எல்லோருக்கும் தெரிந்த காரியம்தான்.