முகிலனை பொம்பளைப் பொறுக்கியாக மாற்றியது யார் தப்பு?

முகிலன் உயிருடன் இருக்கிறார் என்று சந்தோஷப்படுவதற்குள், அவரைச் சுற்றி ஏராளமான வம்புகள், வழக்குகள் களை கட்டுகிறது.


இப்போது அவருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் வலைதளத்தில் ஏராளமான புரட்சியாளர்கள் பொங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
முகிலனுக்கு ஆதரவாக ஒரு பெண் கொடுத்திருக்கும் குரல் இது.. அது என்னடா பெண்ணோட சம்பந்தப்படுத்தி பேசிட்டா ஒருத்தனோட மதிக்க குறைச்சிடலாம்னு 21ஆம் நூற்றாண்டிலும் லூசு மாதிரி உளறிட்டு அலையறீங்க. பெண்கள் நாங்களும் அறிவுதளத்தில் எட்டி பாத்துட்டோம்ல. நாங்க இந்த செய்திகளை எவ்வளவு கோவமா அணுகுவோம்னு தெரிஞ்சிக்கோங்க.

பெண் மேல ஆசைப்பட்டுட்டா, தீண்டிட்டா, அனுபவிச்சிட்டா... அவன் கெட்டவனா? அவ்ளோ கேவலமாதான் பெண்களை பாக்கறீங்களா... இதெல்லாம் இவ்ளோ லேட்டா புரியுது எங்களுக்கு. ஏன்டா பெண் ஒரு அறிவுள்ள மனுஷி. அவளோட விருப்பம் எல்லாம் பாலியல் குற்றத்துல வராது. பெண்ணுக்கு முடிவெடுக்க தெரியும். ஆனா "உனக்கு ஒண்ணும் தெரியாது. உலகம் மோசம். ஆண்கள் மோசம். ஏமாத்திடுவானுங்க. நீ கெட்டு போயிடுவ. நடுதெருவுல நிப்ப"

அப்படி மயிறு மாதிரி ஏன்டா சமூகத்தை வளத்து வச்சிரூக்கீங்க. பெண்களை நடக்கவிடாம ரோடு பஸ்ஸ்டாண்டு, மார்கெட் டீக்கடை பேக்கரி அடைச்சி கெடந்து என்ன எழவடா பேசறீங்க. பெண்களை பத்தி புறணி, பேசுனா உங்கள அறிவுள்ள பெண்கள் எப்படிடா மதிப்போம். இத்தனை வயசு கல்யாணம் இத்தனை வயசுல குழந்தை பெத்துக்கனும் என்ற சமூகவிதிகள் இல்லைன்னா பெண்கள் உங்கள மாதிரி கழிவுகளை தேர்ந்தெடுத்து புள்ள பெத்துக்க மாட்டாங்க. வொர்த்தே இல்லைடா நீங்கள்ளாம்.

ஒரு ஆணை கேவலப்படுத்தனும்னா பெண்ணோட சம்பந்தப்படுத்தி பேசுவீங்களா? முகிலன் பற்றிய அவதூறு செய்திகள் பரப்பப்பட்ட போது வந்த கோவம். வார்த்தைல கொண்டுவந்துட்டேன் என நினைக்கிறேன்.அதிகாரத்திற்கு எதிராக துணிச்சலுடன் போராடுகிறவர்களை சொந்த விவகாரங்களை வைத்து முடக்க நினைப்பது அதிகாரத்தின் இயல்பு. 

 ஆனால் மக்களின் நீதிக்காக போராடும் ஒருவன் அரசதிகாரத்தால் வேட்டை - யாடப்படும் போது அவனுக்கு சமூகத் -திடமிருந்து கிடைக்கவேண்டிய தார்மீக ஆதரவு எதுவும் கிடைக்கவிடாமல் அந்த சமயத்தில் அவனது தனிப்பட்ட விவகாரங்களை முன்னிலைப்படுத்துவது அவனை படுகொலை செய்வதற்கு சமமானது.

தருண் தேஜ்பாலை அரசும் ஊடகங்களும் மூர்க்கமாக வேட்டையாடியது அவர் ஒரு பெண்ணிடம் கண்ணியக்குறைவாக நடந்துகொண்டார் என்பதால் மட்டுமா? அவரது தெஹல்கா இதழ் நடத்திய ஸ்டிங்க் ஆபரேஷன் குஜராத் கலவரத்தின் கோர முகத்தை வெளிக்கொணர்ந்தது என்பதால்தான். அமெரிக்கா நாடுகளை எப்படி உளவு பார்க்கிறது என்பதை அம்பலப்படுத்திய ஜீலியன் அசாங்கேவை நாடு நாடாக துரத்தி கடைசியில் ஒரு பாலியல் விவகாரத்தில் வேட்டையாடுகிறார்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தியைத்தை எதிர்த்து உலகையே அதிரவைத்தவனுக்கு எதிராகவும் இந்த பாலியல் ஆயுதம்தான் கையிலெடுக்கப்பட்டிருக்கிறது என்ர ரீதியில் முகிலனுக்கு ஆதரவாக குரல் எழுப்பியிருக்கிறார் ஒரு பெண்மணி.
நீங்க நினைக்கிற அளவுக்கு வொர்த்தா முகிலன் என்பதை அவரே முதலில் சொல்லட்டும்!