நிதி ஆண்டு முடிந்தது! யாரெல்லாம் வருமான வரி கட்ட வேண்டும் தெரியுமா?

வருமான வரி யாரெல்லாம் கட்ட வேண்டும் என்பதை இந்த கட்டுரை மூலமாக தெரிந்து கொள்ளலாம்.


நிதியாண்டு முடிந்த பின், நம் மொத்த வருமானத்தை கணக்கிட வேண்டும். மாத சம்பளம் போக, வங்கிக் கணக்கில் வரும் வட்டி, வீட்டை வாடகைக்கு விட்டதால் கிடைத்த வருமானம் என்று வருமானங்களைக் கணக்கிட்டு, அதற்காக வரியை நிர்ணயிக்க வேண்டும்.சில வருமானங்களுக்கு வரி விலக்கு உண்டு.

உதாரணமாக, கம்பெனி பங்குகளில் வரும் ஈவுத்தொகைக்கு(டிவிடெண்ட்) பத்து லட்சம் ரூபாய் வரை வரி கிடையாது. நீங்கள் வீடு கட்ட கடன் வாங்கியிருந்தால், அதற்காக நீங்கள் கட்டும் வட்டியையும், அசலையும் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு, உங்கள் வருமானத்திலிருந்து கழித்து கொள்ளலாம்.

சில விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஆயுள் காப்பீட்டு பிரிமியம், மருத்துவச் செலவு காப்பீட்டிற்கான செலவு, உங்கள் குழந்தைகளின் கல்விச் செலவு போன்றவற்றை உங்கள் வருமானத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம். கழிவுகளுக்கு பிறகு இருக்கும் தொகை, உங்கள் நிகர வருமானம்.

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக் களின் ஆண்டு நிகர வருமானம் ரூ.2.5 லட்சத்தைத் தாண்டும்போது. 80 வயதுக்கு மேற்பட்ட மிகவும் மூத்த குடிமக்களின் ஆண்டு நிகர வருமானம் ரூ.5 லட்சத்தைத் தாண்டும் போது.

கூடுதலாக வருமான வரி பிடிக்கப்பட்டு ரீஃபண்ட் பெற வேண்டியிருந்தால். பங்குகள், மியூச்சுவல் யூனி ட்கள், சொத்து விற்றது மூலம் மூலதன ஆதாயம் கிடைத்திருந்தால். நீங்கள் அனைவரும் வருமான வரி கட்ட வேண்டும்.