நடிகர் சூர்யா நீட் விவகாரத்தில் பற்றவைத்த தீ தமிழகம் முழுவதும் எரிகிறது? நீட் அறிக்கை விவகாரத்தில் மோதிக்கொள்ளும் மாண்புமிகுக்கள்.

நடிகர் சூர்யா நீட் விவகாரத்தில் பற்றவைத்த தீ தமிழகம் முழுவதும் சுடர்விட்டு எரிந்துகொண்டு இருக்கிறது. அதில் அவர், ’கொரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து 'வீடியோ கான்பிரன்ஸிங்' மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது" என்று நீதிமன்ற உத்தரவை கடுமையாக சாடியிருந்தார்.


நடிகர் சூர்யாவின் அறிக்கை நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறியுள்ளார். அவர், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹிக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் எழுதியுள்ள கடிதத்தில் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

. சூர்யாவின் இந்த கருத்தின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் , நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார் . இதனால் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்க தொடர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம், சூர்யாவின் கருத்தை பெருந்தன்மையாக தவிர்த்துவிடலாம் என்று ஓய்வுபெற்ற நீதிபதி சுதந்திரம் கருத்து தெரிவித்துள்ளார்.

ஹை கோர்ட்டாவது …. ராவது என்று கூறிய ஹெச்.ராஜாவின் மீதே நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனும்போது, சூர்யாவின் கருத்தை தவிர்ப்பதுதான் நல்லது என்ற சலசலப்பு எழுந்துள்ளது.