2018ன் சிறந்த நடிகை யார் தெரியுமா ? நயன்தாராவா? சமந்தாவா?

டைம்ஸ் தமிழ் நியூஸ் சார்பாக இரண்டாவது ஆண்டாக சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.


டைம்ஸ் தமிழ் நியூஸ் சார்பாக இரண்டாவது ஆண்டாக சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2018ம் ஆண்டுக்கு விருதுபெறும் சிறந்த திரைப்பட கலைஞர்களை அறிவிப்பதில் டைம்ஸ் தமிழ் பெருமைப்படுகிறது. இந்த விருதுக் கலைஞர்களை தேர்வுசெய்யும் குழுவில் சினிமா இயக்குனர்கள், நடிகர்கள், திரைப்பட விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் என 20 பேர் இடம் பெற்றுள்ளனர். 

தேர்வுக்குழுவினரால், ஒவ்வொரு விருதுக்கும் இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள். டிசம்பர் 30ம் தேதி விருது பெறும் கலைஞர்களின் இறுதிப் பட்டியல் அறிவிக்கப்படும். இன்று 2018ம் ஆண்டுக்கான சிறந்த நடிகையர் யார் என்பதைப் பார்க்கலாம். .

வழக்கம்போல் சிறந்த நடிகை விருதுக்கு கடுமையான போட்டி இல்லை. ஏனென்றால் தமிழில் பெரும்பாலான திரைப்படங்கள் நாயகனை மையமாகக் கொண்டவையே. ஆனாலும், சிறந்த நடிகையர் பட்டியலில் நடிகையர் திலகம் படத்திற்காக கீர்த்தி சுரேஷ், ஒரு குப்பைக் கதை மனீஷா, வடசென்னை ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றவர்கள் சிறப்பாக நடித்திருந்தாலும் இவர்களை மிஞ்சும் வகையில் இரண்டு நட்சத்திரங்கள் சிறந்த நடிகை விருதுக்கு தேர்வு பெறுகிறார்கள்.

முதல் நபர் சமந்தா. யு டர்ன் படத்துக்காக சிறந்த நடிகை விருதுக்கு தேர்வு செய்யப்படுகிறார். திருமணத்திற்குப் பிறகு நடிக்க வந்ததாலோ என்னவோ, நடிப்பில் நல்ல மெச்சூரிட்டி பார்க்க முடிகிறது. கிட்டத்தட்ட ஆங்கிலப் பட நாயகியைப் போன்று கேமராவுக்கு முகம் காட்டுவதில் முக்கியத்துவம் காட்டாமல், இயல்பான கேரக்ட்ராக படம் முழுவதும் நடித்திருந்தார். கேரக்டருக்கு எந்த அளவுக்கு நடிக்க வேண்டுமோ, அந்த லிமிட்டை பயத்தின் போதும் எல்லை மீறாமல் நடித்திருக்கிறார் சமந்தா. அதனால் எளிதாக சிறந்த நடிகைக்கான பட்டியலில் சேர்கிறார்

அடுத்த நபர் லேடி சூப்பர்ஸ்டார் பட்டியலில் சேர்ந்து கலக்கிக்கொண்டிருக்கும் நயன்தாரா. இந்த ஆண்டு அவருக்கு இரண்டு படங்கள் அவருக்கு சிறப்பாக அமைந்திருக்கிறது. கோலமாவு கோகிலா, இமைக்காநொடிகள் இரண்டுமே நயன் தாராவை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டவை. நயனும் நம்பிக்கைக்கு கொஞ்சமும் வஞ்சனை செய்யாமல் நடித்துக்கொடுத்திருக்கிறார். அப்பாவிப் பெண்ணாக இருந்து வில்லத்தனம் செய்யும் அளவுக்கு நயன் மாறுவதும், இயல்பாக யோகிபாபுவுடன் சேர்ந்து காமெடி செய்வதும் கோலமாவின் ஹைலைட். அதற்கு அப்படியே நேர்மாறாக மேல்தட்டு வர்க்கப் பெண் அதிகாரியாக இமைக்கா நொடிகளில் கெத்து காட்டியிருந்தார். அதனால் சிறந்த நடிகை விருதுக்குத் தேர்வாகிறார்.

ஆக, 2018ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான டைம்ஸ் தமிழ் விருதை பெறப்போவது சமந்தா அல்லது நயன் தாராதான். இந்த இருவரில் யார் வெற்றி பெறுகிறார் என்பதை டிசம்பர் 30 அன்று அறிந்துகொள்ளுங்கள்.