மோடியை ஒருமையில் திட்டினது யாரு? மீடியாக்களை புறம்தள்ளும் தமிழக பாஜக! காரணம் உட்கட்சி பஞ்சாயத்து!

விஜயகாந்த், ராமதாஸ் கட்சிகள் சார்பில் யாரும் மீடியாவுக்கு எட்டிப் பார்ப்பது இல்லை.


கொஞ்சகாலம் வனவாசத்தில் இருந்த அ.தி.மு.க. இப்போது மீண்டும் மீடியாவில் பேசுவதற்கு சிலரை போட்டுவிட்டது. இந்த லட்சணத்தில் ஒவ்வொரு மீடியாவிலும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த பா.ஜ.க. திடீரென பின்வாங்கிவிட்டது. யாரையும் மீடியாவுக்கு அனுப்ப மாட்டோம் என்று தெரிவித்துள்ளது. ஏனாம்..?

ஒரு சேனலில் நரேந்திரமோடியை ஒருமையில் திட்டி விட்டார்களாம். அதனை நெறியாளர் கண்டுகொள்ளவில்லை. அந்த ஒரு சேனலை மட்டும் தடை போட்டால் சரியாக இருக்காது என்பதால், அனைத்து மீடியாக்களுக்கும் தடை போட்டு விட்டார்களாம்.  மேலும்,  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 95 சதவீத ஊடகங்கள் பா.ஜ.கவுக்கு எதிராகத்தான் இருக்கிறதாம். குறிப்பாக, செய்தி சேனல்கள் எல்லாமே ஏதாவது ஒரு கட்சியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதனால், தொகுப்பாளர்கள் நடுநிலையுடன் நடக்க முடியவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

இப்படியொரு செய்தி பா.ஜ.க. ஐ.டி.விங்க் வெளியிட்டிருக்கும் நிலையில், உண்மையான காரணம் வேறு என்கிறார்கள். பா.ஜ.க.வில் நான்கு டீம் இருக்கிறது. அதாவது தமிழிசை, வானதி, பொன்னார் மற்றும் ஹெச்.ராஜா என நால்வருக்கும் நான்கு டீம் இருக்கிறது. பொதுவாக ஒரே டீமில் இருந்து ஆட்கள் அழைக்கபடுவதால், மற்ற டீம் போட்டுக் கொடுத்துவிட்டது என்கிறார்கள்.

அது யாருன்னு சொல்லித்தான் தெரியணுமா?