விஜயகாந்த் சொத்து ஏலம் போகாம காப்பாத்துனது யாரு? லதா ரஜினியிடம் பாடம் படித்த பிரேமலதா!

தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றியே தீரவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் கட்சியைத் தொடங்கினார் நடிகர் விஜயகாந்த்.


மக்களும் நல்ல ஆதரவு கொடுத்தார்கள். ஆனால், அதற்குப் பிறகுதான் குறுக்குப்புத்தி வேலை பார்த்தது. ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்து ஏராளமான எம்.எல்.ஏ.க்களைப் பெற்றார். ஆனால், உடனடியாகவே ஜெயலலிதாவுடன் மோதல் ஏற்பட, அவரது கட்சி உடைக்கப்பட்டு, எல்லாமே கலகலத்துப் போனது. அடுத்து மக்கள் நலக் கூட்டணி வைத்து, தனியே ஆட்சியைப் பிடிக்கலாம் என்று ஆசைப்பட்டார். அதுவும் ஊசிப்போனது.

இந்த நிலையில் அவரது உடல் நலனும் கெட்டுப்போனது. நடையும், பேச்சும் தளர்ந்துபோனது. அதைக் காட்டி பரிதாப ஓட்டுக்கள் அள்ளலாம் என்று முயற்சி செய்து, அதுவும் தோற்றுப் போன நிலையில்தான் வங்கியில் விஜயகாந்த் சொத்து ஏலம் போவதாக அறிவிப்பு வந்தது. கடன் கொடுத்தா கேட்கத்தானே செய்வாங்க... 5.52 கோடி ரூபாய் கடனுக்காக சொத்து ஏலத்துக்கு வந்தது. பணமே இல்லாம கஷ்டப்படுறாங்கப்பா என்று தொண்டர்களும் நிர்வாகிகளும் வருத்தப்படுவார்கள் என்று நினைத்தார்கள்.

ஆனால், நடந்ததோ வேறு. ஆம், நூறு கோடி ரூபாய்க்கும் மேலாக சொத்து வைத்துக்கொண்டு வங்கியை ஏமாத்துனா எப்படி என்று கேப்டன் கட்சி ஆட்களே கடுப்பானார்கள். அதனால், வேறு வழியின்றி பிரேமலதாவே 1.20 கோடி ரூபாய் வங்கியில் கட்டி, ஏல நடவடிக்கையை நிறுத்தி வைத்திருக்கிறாராம். லதா ரஜினிகாந்த் இப்படித்தான் வாடகை தர காசு இல்லாத மாதிரி சீன் போட்டார். அவரைப் பார்த்து, அது மாதிரியே பிரேமலதாவும் நடிக்கிறாரே, இதெல்லாம் நல்லாவா இருக்குது?