ஆச்சி மசாலாவிற்கு கேரளாவில் தடையா? உண்மையில் நடந்தது என்ன? ஒரு பரபரப்பு ரிப்போர்ட்!

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் அதிகம் விற்கும் பிராண்டான ஆச்சி மசாலா செய்திகளிலும்,அதைவிட அதிகமாக சமூக வலைத்தளத்திலும் அடிபட்டுக் கொண்டு இருக்கிறது.


கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் ஆச்சி மசாலா தயாரிப்பான மிளகாய்த்தூளை தடைசெய்து விட்டதாக செய்திகள் வெளியாகின. அதைத்தொடர்ந்து 'ஆச்சி மசாலாவா பூச்சி மசாலாவா'!?

ஆச்சி மசால உரிமையாளர் பத்மசிங் ஐசக் மதமாற்றத்துக்கு நிதி தருபவர் அவர் தயாரிப்புகளை வாங்காதீர்கள் என்று ஒரு தரப்பும், இது ஹெச்.ராஜா போன்ற சங்கிகளின் பொய் பிரச்சாரம் என்று ஒரு தரப்பும் களமிறங்கி ட்விட்டரிலும்,முகநூலிலும் எழுதிக்குவித்தனர். இது குறித்து விசாரித்த போது 'இருக்கு ஆனா இல்லை' என்கிறது உண்மை நிலவரம்.

இந்த தடை விதிக்கப்பட்டது உண்மைதான்,ஆனால்,அது கடந்த ஜுன்மாதத் தயாரிப்புக்கு.அந்த மாதத்தில் தயாரிக்கப்பட்ட ஆச்சி மசாலாவின் மிளகாய்தூளில் பூச்சி மருந்தின் அளவு ஒரு கிலோவுக்கு ஒரு கிராம் என்கிற அளவில் இருந்திருக்கிறது. இது அனுமதிக்கப்பட அளவான 0.01 கிராமை விட மிக அதிகமாக இருப்பதாக திருசூர் மாவட்டம் காக்காடில் உள்ள மாநில உணவு ஆய்வுக்கூடம் சொன்னதால் அந்த மாத தயாரிப்புக்கு மட்டும் தடை விதித்தோம்.

ஆச்சி மசாலா நிறுவனம் விரும்பினால் பெங்களூரில் இருக்கும் தேசிய உணவு ஆய்வு மையத்தில் மேல் முறையீடு செய்யலாம் என்றும் தாங்கள் சொன்னதாக திருச்சூர் மாவட்ட உணவுக் கட்டுப்பாட்டு துறை உதவி ஆனையர் சொல்கிறார். அதே போல ஆச்சி மசாலா நிறுவனத்தின் பிரதி நிதியான நாகராஜன் கூறும்போது 'நாங்கள், காக்காடு ஆய்வகத்தின் முடிவை மறு ஆய்வு செய்ய புனேயில் உள்ள ,

மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு நிறுவனத்தை அனுகினோம்.அவர்களது ஆய்வில் எங்கள் ஆச்சி மசாலா நிறுவனம் அரசின் அங்கீகரிக்கப்பட்ட அளவுக்கு கூடுதலாக பூச்சிக் கொல்லி மருந்தை கல்லக்கவில்லை என்று சொல்லிவிட்டது  என்கிறார் .

இப்படி.எல்லாம் செய்திகளும் மறுப்புகளும் வந்ததே தெரியாமல் மக்கள் ஆச்சி மசாலா போன்ற பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் மசாலா பொருட்களை தொடர்ந்து வாங்கி ஆதரிக்கித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.இனியும் அப்படித்தான் இருப்பார்கள்.