இடுப்பு மடிப்பில் இளைஞர்களை மடித்தவர்! யார் இந்த ரம்யா பாண்டியன்?

இடுப்பு மடிப்பு தெரியும்படி ரம்யா பாண்டியன் வெளியிட்ட ஒரே புகைப்படம் தான் தற்போது இளைஞர்களின் பேவரிட் புகைப்படமாகியுள்ளது. நெல்லையை பூர்வீகமாக கொண்டவர் ரம்யா. இவருடைய தந்தை பெயர் பாண்டியன். அதனால் தான் தனது பெயரை ரம்யா பாண்டியன் என்று வைத்துக் கொண்டார்.


இடுப்பு மடிப்பு தெரியும்படி ரம்யா பாண்டியன் வெளியிட்ட ஒரே புகைப்படம் தான் தற்போது இளைஞர்களின் பேவரிட் புகைப்படமாகியுள்ளது. நெல்லையை பூர்வீகமாக கொண்டவர் ரம்யா. இவருடைய தந்தை பெயர் பாண்டியன். அதனால் தான் தனது பெயரை ரம்யா பாண்டியன் என்று வைத்துக் கொண்டார்.

இவர் நெல்லையில் உள்ள புஷ்பலதா மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்துள்ளார். பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். படிக்கும் போதே ரம்யாவுக்கு நடிப்பு மீது ஆசை.

அதனால் துவக்கத்தில் குறும்படங்களில் ரம்யா நடிக்க ஆரம்பித்தார். பிறகு மானே தேனே எனும் குறும்படம் மூலம் புகழ் அடைந்தார். இந்த வெளிச்சத்தின் மூலம் ரம்யாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது.

அதன்படி கூந்தலும் மீசையும், டம்மி டப்பாசு ஆகிய மொக்கை படங்களில் நடித்தார். இதன் பிறகு ஜோக்கர் படத்தில் நடிக்க இயக்குனர் ராஜநாராயணன் வாய்ப்பு கொடுத்தார்.

ஜோக்கர் படத்தில் ஜனாபதி எனும் வேடத்தில் நடித்தவருக்கு துணையாக நிற்கும் கேரக்டரில் ரம்யா பின்னி எடுத்திருப்பார். இதன் மூலம் நடிக்கத் தெரிந்த நடிகை என பெயர் பெற்றவருக்கு ஆண் தேவதை படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இரண்டு படங்களுமே கமர்சியலாக வெற்றி பெறாத நிலையில் மசாலா படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்னர் சேலையில் கொஞ்சூண்டு கவர்ச்சி காட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.

இந்த புகைப்படம் ரம்யா பாண்டியன் யார் என்று கேட்க வைத்தது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ரம்யா வெளியிட்ட புகைப்படம் தான் சமூக வலைதளங்களை பற்றி எரிய வைத்துள்ளது. இளைஞர்கள் பெரும்பாலோனார் அந்த புகைப்படங்களை சேர் செய்து யார் இவர் என்று கேட்டு வருகின்றனர்.

அதற்கு காரணம் சேலை கட்டி ரம்யா காட்டியுள்ள கொஞ்சூண்டு கவர்ச்சி தான். எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்து தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ள ரம்யாவை விரைவில் பிரபல இயக்குனர்களும் நடிகர்களும் தேடிச் செல்வார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.