யார் இந்த ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரி ரேணுராஜ்? கேரளாவில் கம்யூனிஸ்ட்களை மிரட்டும் புயல்!

ரேணுராஜ் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் இருப்பதே சமீபத்தில்தான் தெரியவந்தது.


அதாவது இயற்கை எழில் கொஞ்சும் மூணாறு பகுதியில், அவர் சப் கலெக்டராக பணியில் இருந்தபோது ரேணுராஜ் எடுத்த நடவடிக்கைகள்தான் அவருடைய பெயரை சொல்லின.

ஆம், விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் யாருடையதாக இருந்தாலும், எந்தக் கட்சியின் ஆதரவு இருந்தாலும், ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவு இருந்தாலும் சரி... யாருக்கும் பயப்படாமல் `9 மாதங்கள்; 90 ஆக்கிரமிப்புகள் கட்டிடங்களை அகற்றினார் ரேணு.

-மூணாறில் ஓடும் முத்திரா ஆற்றின் கரையில் கட்டப்பட்டு வரும் பஞ்சாயத்து அலுவலகம் கட்டிடம் நதிக்கரை பாதுகாப்பு விதிகளை மீறி உள்ளது என்று உடனடியாக நிறுத்த உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் சென்ற அரசு தோல்வி அடைந்தது..

ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவரான இடுக்கி தொகுதி முன்னாள் எம்பி ஜாய்ஸ் ஜார்ஜ் குடும்பத்தினர் முறைகேடாக 20 ஏக்கர் நிலத்தை பட்டா போட்டுள்ளது தெரியவரவே,  உடனடியாக அந்த 20 ஏக்கர் நில பட்டாவை ரத்து செய்து விட்டார்.

இந்த விவகாரத்திற்குப் பிறகு இவரை பதவியில் இருக்கவைப்பது தவறு என்று நினைத்த பினராய் விஜயன் அரசு, இவரை நிர்வாகத் துறைக்கு டிரான்ஸ்ஃபர் செய்தது. ஆனால், மாற்றம் செய்யப்பட்ட கடைசி நாளில், 1999 ம் ஆண்டு முறைகேடாக வாங்கப்பட்ட 2.5 ஏக்கர் கொண்ட

4 நிலங்களின் பட்டாக்களை ரத்து செய்து உத்தரவிட்டார். இவர் இப்போது கேரள மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். அதை எந்த அரசாலும் மாற்ற முடியாது.