புதுச்சேரி, காமராஜ் நகரில் ஜெயித்திருந்த காங்கிரஸின் வைத்தியலிங்கம் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.பி. ஆனதால், இங்கு இடைத்தேர்தல் வந்திருக்கிறது. இங்கு நாராயணசாமியின் தீவிர விசுவாசியான ஜான்குமார் காங்கிரஸ் சார்பில் நிற்கிறார்.
காமராஜ் நகரில் யாருடைய கொடி பறக்கிறது? டைம்ஸ் தமிழ் ஃபைனல் கணிப்பு
இந்தத் தொகுதியில் அ.தி.மு.க. நிற்கவேண்டும் என்று ஆசைப்பட்டது. ஆனால், எடப்பாடியும் பன்னீரும் அந்த பஞ்சாயத்தே வேண்டாம் என்று ரங்கசாமி கட்சிக்கு தொகுதியை தள்ளிவிட்டனர். அதனால் வேறு வழியே இல்லாமல் ரங்கசாமியின் கட்சியினர் நிற்கிறார்கள்.
ரங்கசாமி அறிவித்த வேட்பாளர் திடீரென ஓடிவிடவே திடீர் வேட்பாளராகத்தான் புவனா என்ற புவனேஸ்வரன் நிற்கிறார்.
நாராயணசாமிக்கு பா.ஜ.க. தொடர்ந்து கொடுத்துவரும் குடைச்சல் காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு ஏரியாவில் அனுதாபம் இருக்கும் நிலையில், ரங்கசாமி குட்டையைக் குழப்பும் விதமாகத்தான் செயல்பட்டு வருகிறார்.
இரண்டு கட்சிகளும் முடிந்த வரைக்கும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வருகிறார்கள். ஆனால், ரங்கசாமி மீது மக்களுக்கு இருந்த அத்தனை அபிமானமும் ஒட்டுமொத்தமாக முன்பே காணாமல் போய்விட்டது. அதனால் இங்கே மீண்டும் நாராயணசாமியின் கொடியே பறக்கிறது. காங்கிரசின் கோட்டை புதுவை என்று மீண்டும் நிரூபணமாக உள்ளது.