மதுரை கலெக்டர் டூ இந்திய தேர்தல் ஆணையர்! யார் இந்த டி என் சேஷன்? அரசியல்வாதிகளை அலறவிட்டவர்!

தூங்கி எழுந்து பார்த்தால் டிஎன் சேஷனை காணோம். 87வது வயதில் விண்ணுக்கு பறந்து விட்டிருக்கிறார்..


ஐஏஎஸ் அதிகாரிகளின் கனவு பணியான கேபினட் செகரட்டரிபதவியை வகித்த போதே அதிகாரத்தை தெறிக்க விட்டவர். அப்படிப்பட்டவரிடம் இந்திய தேர்தல் ஆணையத்தை கொண்டு போய் கையில் கொடுத்தால் சும்மா இருப்பாரா ?

தேர்தல் களத்தில் எத்தனை விதிமுறைகள்.. எத்தனை கட்டுப்பாடுகள்.. ஆட்டமாடா போட்டீங்க அடிச்சான் பாரு ஆப்பு என்று பொதுமக்கள் மகிழ்ச்சியில் திளைக்க, எதிர்ப்பக்கம் அரசியல்வாதிகள் கதிகலங்கி போனார்கள்..

தாம் வகித்த பதவிக்கு அழகும் பெருமையும் கம்பீரத்தையும் சேர்த்துக் கொடுத்த இந்திய ஆட்சி பணியாளர்களில் டிஎன் ஸ்டேஷனுக்கு முன் வரிசையில் முக்கிய இடம் உண்டு..

கடந்த ஆண்டு மனைவியை இழந்து சென்னை வீட்டில் வசித்து வந்த டிஎன் ஸ்டேஷனுக்கு வாரிசுகள் எதுவுமில்லை.