யார் இந்த பிராமணர்கள்? இவர்களுடைய நாடு எது? வரலாறு என்ன?

பிராமணர்கள் பற்றி தொல்காப்பியன் பதிவு செம வைரலாகியுள்ளது.


நீங்களும் படித்துப் பாருங்கள். தமிழகத்தில் இருக்கும் பிராமணர்கள் தமிழக பிராமணர்கள் என்றுதான் அழைக்கப்படுகிறார்கள். அதாவது தமிழகத்தில் வாழும் பிராமணர்கள் என்பது அதன் பொருள். இங்கு பலவேறு சாதியினர் வாழ்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஒட்டு மொத்தமாக தமிழர்கள் என்கிற போர்வைக்குள் வந்து விடுகிறார்கள். அதாவது, ஒரு பறையன் தமிழ் பறையன் என்றோ, ஒரு கள்ளன் தமிழ் கள்ளன் என்றோ, ஒரு மறவன் தமிழ் மறவன் என்றோ, ஒரு முதலியார் தமிழ் முதலியார் என்றோ தனியாக குறிப்பிடப்படுவது இல்லை.

எந்தச் சாதியைச் சொன்னாலும் அது தமிழ் இனத்தைத்தான் குறிக்கும். ஆனால் ஒரு பிராமணன் தமிழ் பிராமணன் ஆகிறான். காரணம் அவன் தமிழ் பேசினாலும், தமிழகத்தில் வாழ்ந்தாலும் அவன் தமிழன் இல்லை, அவன் ஒரு பிராமணன் என்பதே அதன் பொருள். இதன் மூலம் பிராமணன் என்பது ஒரு சாதி இல்லை என்பது உறுதி ஆகிறது. அதாவது, பிராமணன் என்பது இந்தியாவுக்கு வெளியில் இருந்து வந்த ஓர் 'அந்நியன்' என்ற பொருளிலேயே வழங்கப்படுகிறது. அதாவது ‘வந்தேறி’. பிராமணன் என்கிற பதத்தை சரியாக விளக்கினால், "மந்திரம், சாமி, பூதம் என்று எழுதப்பட்ட கட்டுக்கதைகளை சொல்லி ஏமாற்றும் வெளியூர்க்காரன்", எனலாம்!

இந்த உண்மையை எந்த ஒரு பிராமணரும் எதிர்த்ததே இல்லை.எந்த ஒரு பிராமண சிந்தனையாளரும் பிராமணன் இந்த மண்ணின் மைந்தன்தான் என்று வாதிட்டதே இல்லை. எந்த ஒரு பிராமணரும் இந்த மண்ணுக்கு உரிமை கொண்டாடியது இல்லை. எந்த ஒரு பிராமணரும் இந்த மொழிக்கு உரிமை கொண்டாடுவது இல்லை. எந்த ஒரு பிராமணரும் மனித உறவுகளை சொந்தம் கொண்டாடுவது இல்லை  எந்த ஒரு பிராமணரும் எளிய மக்களின் சாமியை உரிமை கொண்டாடுவது இல்லை. எந்த ஒரு பிராமணரும் பொதுமக்களின் ‘பேச்சு மொழியை’ பேசுவது இல்லை. எந்த ஒரு பிராமணரும் பொதுமக்கள் உடுத்தும் பாணியை பின்பற்றுவது இல்லை. எந்த ஒரு பிராமணரும் பொது மக்களோடு இணைந்து வாழ்வது இல்லை.

மாறாக, அவர்கள் இந்திய தேசியம் குறித்துப் பேசுவார்கள். இந்தியர்கள் என்றும் வந்தே மாதரம் என்றும் முழங்குவார்கள். இந்தியாவுக்கே சொந்த நிலம் இல்லாதபோது இந்தியர்களுக்கு எப்படி சொந்த நிலம் இருக்க முடியும் என்று அவர்கள் சிந்தித்ததாகத் தெரியவில்லை. இந்தியா என்பது ஒரு மாயை. அது எப்பொழுது வேண்டுமானாலும் கலைந்து உடைந்து நொறுங்கும். இதுதான் பிராமணர்களின் தலைமேல் தொங்கும் கத்தி.
பிராமணர்கள் நிலம் இல்லாதவர்களாக இருப்பதற்கு பிராமணர்கள்தான் காரணம். தாங்கள் உடல் வருத்தி உற்பத்தி ஏதும் செய்யாமல் மற்றவர் உழைப்பை உறிஞ்சித் தின்னவும் அதே நேரத்தில் ஆட்சி அதிகாரத்தின் அருகாமையிலேயே வாழவும் அவர்கள் வகுத்துக் கொண்ட இருபிறப்பாளர் என்னும் 'உயர்வு நவிற்சி' கோட்பாடுதான் அதற்குக் காரணம்.

முதலில் அவர்கள் இழந்தது இந்திய ரத்த உறவுகளை; பிராமணர்கள் தங்களை மனிதர்களுக்கு எல்லாம் மேலானவர்களாக் அறிவித்துக் கொண்டார்கள். அவர்கள் மனிதர்கள் அல்ல; பூதேவர்கள். அவர்கள் இரு பிறப்பாளர்கள். அதாவது மனிதர்களைப் போல தோற்றம் அளிக்கும் தேவர்கள். பிராமணர்கள் தங்களை கடவுளர்கள் என்று சொல்லிக் கொண்டதால் இந்த நாட்டின் பூர்வ குடிகளின் மனித பாசத்தையும் ரத்த உறவையும் இழந்தார்கள்.

அடுத்து, சமஸ்கிருத மொழியை இழந்தார்கள்; சமஸ்கிருதம் அவர்களின் மொழி என்று உரிமைக் கொண்டாடினார்கள். அது பாதி உண்மை என்றாலும் பிராமணர்கள் சமஸ்கிருதத்தை தேவ பாஷை என்று சொல்லி அதை பிராமணர் அல்லாதாரிடம் இருந்து மறைத்து வைத்தார்கள். எப்படி எனில், சம்ஸ்கிருத மந்திரங்களை கேட்கும் பிராமண அல்லாதாரின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றும் அளவுக்கு!
இதன் காரணமாக பெருவாரியான மக்களின் பார்வையையும் பங்களிப்பையும் இழக்கச் செய்து சமஸ்கிருதத்தை அழித்து ஒழித்தார்கள். இப்படி அவர்கள் மொழி அற்றவர்களாக ஆனார்கள். 

இறுதியாக நிலத்தையும் இழந்தார்கள்; மண்ணின் பூர்வகுடிகளுக்கும் தங்களுக்கும் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதே பிராமணர்களின் கூற்று. ஏன் என்றால், அவர்கள் சாதாரண மக்கள் அல்ல; கடவுளர்களின் அவதாரங்கள். தாங்கள் மனிதர்களே இல்லை என்று கூறிக் கொண்டதால் பெருவாரியான மக்களின் தொடர்பு அற்றுப் போனார்கள். இவ்வாறு பூர்வ குடிகளுக்கும் பிராமணர்களுக்கும் இடையில் அன்புத் தொடர்பு இல்லாமல் போயிற்று. இறுதியில் பிராமணர்கள் மண்ணையும் இழந்தார்கள். இவ்வாறு பிராமணர்களின் பிராமணீயக் கோட்பாடு அவர்களை நாடற்றவர்களாக ஆக்கி விட்டது!