யாருய்யா இந்த அர்ஜூனன், போலீஸையே இந்த மாதிரி டீல் பண்றாரே..?

ஊர், உலகத்தில் எல்லாம் போலீஸார் வீராதிவீரனாக சண்டியர்த்தனம் செய்துகொண்டிருக்க, ஒரு முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் சேலத்தில் போலீஸை மிரட்டியெடுத்திருக்கிறார்.


இவர் தி.மு.க. நிர்வாகி என்று அ.தி.மு.க.வினரும் பா.ஜ.க.வினரும் தொடர்ந்து போஸ்ட் போட, டென்ஷன் ஆன தி.மு.க.வினர் இதற்காக போலீஸ்க்குப் போயிருக்கிறார்கள் அதாவது, சேலம் சுங்கச்சாவடியில் காவல் உதவி ஆய்வாளர் ஆளும்கட்சிப் பிரமுகரால் தாக்கப்பட்ட சம்பவத்தில்,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கத்தோடு சமூக வலைதளங்களில் அவதூறுச் செய்திகளைப் பரப்பிய அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.,வைச் சேர்ந்த நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் , கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைத் தலைவர் வாகை சந்திரசேகர் ஆகியோர் சைபர் கிரைம் கூடுதல் ஆணையரைச் சந்தித்துப் புகார் அளித்துள்ளனர்.

அப்படின்னா யாருய்யா இந்த அர்ஜூனன். சேலம்- கருப்பூர் காவல் நிலைய சரகம் டோல்கேட் சோதனைச்சாவடியில் முன்னாள் எம்பி அர்ஜுனன் என்பவர் காவலர்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட அர்ஜூனன், ஒரு முன்னாள் காவல் உதவி ஆய்வாளர். ஆம், அதன்பிறகு தர்மபுரி பாராளுமன்ற தொகுதி MP யாக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1980 முதல் 1984 வரை பணியாற்றியுள்ளார். 

அதன்பின் கட்சி மாறி, 1989ல் தாரமங்கலம் சட்டமன்ற தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பின்னர் 1991ல் வீரபாண்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளார்.

 1991 முதல் 1996 வரை ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட அதிமுக செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார். அதன்பிறகு பின்னர் 2006ல் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு சென்றும் அதன் பின்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு சென்றும் பின்னர் தீபா பேரவைக்கு சென்றும் பிறகு மீண்டும் திமுக கட்சியில் சேர்ந்து உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால், தி.மு.க.வில் அவர் இல்லை என்று தி.மு.க.வே சொல்கிறது. 74 வயதில் ஐ.டி. கார்டு கேட்டதற்காக போலீஸாரை கெட்ட வார்த்தையால் வறுத்தெடுத்து எத்திமிதிக்கப் பார்த்த அர்ஜூனன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவரை போலீஸ் ஸ்டேஷனில் வழுக்கிவிழ வைக்க முடியுமா என்பதுதான் இப்போதைய கேள்வி.