ரஜினிகாந்தை ஏமாற்றியது யார்..? சொல்ல மாட்டேன்னா அதை எதுக்குய்யா சொல்றே..?

ரஜினிகாந்தை எல்லோரும் மகா மட்டமாக விமர்சனம் செய்துவரும் நிலையில், இன்று அவர் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு காரியம் செய்திருக்கிறாராம். ஆம், எல்லா நிர்வாகிகளுக்கும் அதாவது 35 பேருக்கு சாப்பாடு போட்டிருக்கிறார்.


அவர் அங்கே சாப்பிடாமல் வீட்டுக்குப் போய்விட்டார். அங்கே போய் பேட்டி கொடுத்தவர், ‘‘நிர்வாகிகளுக்கு சந்தோஷம், ஆனால் எனக்கு ஏமாற்றம்’’ என்று சொன்னார். அது என்ன என்று சொல்ல மாட்டேன் என்றும் சொல்லிவிட்டார்.

அந்த ஏமாற்றத்தை வெளியே சொல்வதில்லை என்று முடிவு எடுத்துவிட்டால், அதைப் பற்றி எதற்காக ஏமாற்றம் என்று சொல்கிறார் என்பதுதான் ஆச்சர்யமான தகவல். ‘கட்சி ஆரம்பிப்பது குறித்தும், தேர்தல் நிலவரம் எப்படி இருக்கும் என்றும் எங்களை மட்டும் பேசச் சொல்லி கேட்டார் தலைவர்’ என்று நிர்வாகிகள் சொல்கிறார்கள்.

இப்படி எத்தனை காலம்தான் சொல்லிக்கொண்டே இருப்பாரோ..?