சாலைகளில் சுற்றித் திரியும் வெள்ளை நிற விநோத விலங்கு! பீதியில் மக்கள்!

இங்கிலாந்தில் சாலையோரங்களில் சுற்றித்திரியும் அபூர்வ வகை வெள்ளை நரி இனத்தை காப்பாற்ற வனத்துறையினர் அவைகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இங்கிலாந்து நாட்டில் சாலை ஓரம் சுற்றித்திரியும் அபூர்வ வகை வெள்ளை நரிகளை காப்பாற்ற வேண்டும் என அந்நாட்டு வனத்துறையினர் அவைகளைப் பிடித்து அவைகளின் இனத்தை காக்க திட்டமிட்டுள்ளனர். லண்டனின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் சினாம்ஸ்கி என்பவர் பூங்காவின் அழகை ரசிப்பதற்காக அங்குள்ள மரம் செடி மற்றும் விலங்குகளை தனது கேமராவில் போட்டோவாக பதிவு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் சாலையோரத்தில் அபூர்வ வகை வெள்ளை நரி குட்டிகள் இரண்டு சாலையில் கொட்டிக்கிடந்த மிதமான உணவுகளை உண்பதற்காக இரு குட்டிகளும் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை படம்பிடித்துள்ளார். இதையடுத்து இந்த வீடியோ காட்சிகளை அந்நாட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.  

இந்நிலையில் அபூர்வ வகையான வெள்ளை நரிகளை காக்க வேண்டுமென பொதுமக்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.அல்பினோ எனப்படும் வெள்ளை ரத்த நிறமிகளைக் கொண்ட இந்த வகை உயிரினங்களைக் அதன் வாழ்க்கைக்கு ஏற்ற இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும் என்று சினாம்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பூங்கா முழுவதிலும் உள்ள வெள்ளை நரி குட்டிகளை கணக்கெடுத்து அவற்றை உரிய பாதுகாப்பான இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் பூங்காவில் உள்ள அனைத்து வெள்ளை நரி குட்டிகளையும் பிடிக்கும் முனைப்போடு பூங்கா முழுவதிலும் சுற்றி வருகின்றனர்.

இதையடுத்து பூங்காவை விட்டு வெளியே சுற்றித் திரியும் அபூர்வ வகை வெள்ளை நரிகளையும் இணைத்து ஒரே இடத்தில் வளர்க்க வேண்டுமென தீவிரமாக தேடி வருகின்றனர்.