பித்தம் நீக்கும் சக்தி அகத்திக்கு உண்டாம் - சப்போட்டா சாப்பிட்டா ஆண்மைக் குறைவு நீங்குமாம் - கொண்டைக்கடலை இதயத்தின் நண்பன்

எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடியது அகத்திக்கீரை. சிற்றகத்தி, பேரகத்தி, செவ்வகத்தி, சீமை அகத்தி எனப் பல வகைகளில் இருந்தாலும் அதிகம் புழக்கத்தில் இருப்பது சிற்றகத்தி கீரை.


* வைட்டமின் -, அயோடின் சத்து நிறைந்திருப்பதால்  நுரையீரல் தொந்தரவு, பித்தம் மற்றும் மலச்சிக்கல் தீர்க்க பயன்படுகிறது.
* அகத்தி சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் புழுக்கள் வெளியேறிவிடும். ஜீரணம் சிறப்பாக நடைபெறும்ம்..
* அகத்திக்கீரைச் சாற்றை தலையில் தேய்த்துக் குளிக்க, மனநிலை பாதிப்புகள் குணமாகும். அத்துடன் சைனஸ் பிரச்னைகளும் தீரும்.
* அகத்திக் கீரையை அடிக்கடியும் அதிகமாகவும் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு மற்றும் சொறி, சிரங்கு ஏற்படலாம்.

 சப்போட்டா சாப்பிட்டா ஆண்மைக் குறைவு நீங்குமாம்

சப்போட்டா பழத்தில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, நியாசின், மாங்கனீஸ், பொட்டாசியம் உள்ளன. இது உடலுக்கு குளிர்ச்சியையும் பலத்தையும் தரும்.

 * ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சப்போட்டாவின் இரும்புச்சத்து சிறப்பாக பயனளிக்கிறது. நரம்புத் தளர்ச்சி மற்றும் ஆண்மைக் குறைபாடுக்கு அருமருந்தாக பயன்படுகிறது.

* சப்போட்டாவுடன் பால் கலந்து குடித்தால் உடல் பலம் பெறும். அத்துடன் களைப்பைப் போக்கி புத்துணர்வு தரக்கூடியது.

* சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை நீக்கக்கூடியது. வாய்ப்புண், வயிற்றுப் புண், மலச்சிக்கல் தீரும்.

* இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், சர்க்கரை, புரதச்சத்து இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.

புரதம் நிறைந்த கொண்டைக்கடலை இதயத்தின் நண்பன்

வீட்டு சமையல் அறையில் இடம் பெற்றிருக்கும் கொண்டைக்கடலை வெள்ளை நிறத்திலும் பிரவுன் நிறத்திலும் கிடைக்கிறது. இதனை மாவாக அரைத்து கடலை மாவாக பயன்படுத்துகிறோம்.

.*  பிரவுன் கொண்டைக்கடலையில்தான் அதிகம் புரதம் உள்ளது. அத்துடன் உடல் எடை குறையவும், இதய நோய் வராமலும் தடுக்கும்  ஒமேகா 3, ஒமேகா6 கலந்திருப்பதால் முழுமையான உணவுப்பொருளாக உள்ளது.

·           ஃபோலிக் ஆசிட்,  மரபணுக் கோளாறுகள் வராமல் தடுக்கும்கோலின்கொண்டைக்கடலையில் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவு.

·         சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், சோடியம்,  பொட்டாசியம் குறைக்க வேண்டிய நிலையில் உள்ளவர்களுக்கு வெள்ளை கொண்டைக்கடலை அதிகம் பயன் தருகிறது.

·         குறைந்த செலவில் அதிக சத்து தரும் கொண்டைக் கடலையை முளைக்கவைத்து சாப்பிடுவது கூடுதல் பலன் அளிக்கும்.