பெற்ற மகளை சித்ரவதை செய்து கொன்ற தாய்! டிவி பார்த்ததால் பயங்கரம்!

5 வயது சிறுமி டி.வி பார்ப்பதை கண்டித்து தாய் அடித்ததில், சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் நித்திய கமலா- கணவர் பாண்டியன்  இருவருக்கும் லத்திகா ஸ்ரீ (5 வயது) மகள் உள்ளார்.

நேற்று சிறுமி லத்திகா படிக்காமல் டிவியை பார்த்து கொண்டு குறும்பு தனம் செய்ததால் கோபம் அடைந்த தாய்  கமலா வழக்கம்போல கண்டிப்பதற்க்காக அடித்ததாக கூறப்படுகிறது..

ஆனால் எதிர்பாராத விதாமக் குழந்தை மயக்கமடைந்தது கமலாவை அதிர்ச்சியில் அழ்த்தியது, உடனடியாக மகளை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்த்ஜு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து, சேலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி லத்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..

தகவல் அறிந்து வந்த  காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்த்ஜி வருகின்றனர், மகளின் மீதான பாசமே அவள் உயிருக்கு ஆபத்தான இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...