பெரியார் எந்தப் பதவியை அடைவதற்காக பாடுபட்டார்? கேள்வி எழுப்பும் திராவிடம்.

பெரியாரை அவமானப்படுத்துவதற்கு என்றே ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. அவர்களுக்குப் பதிலடி கொடுக்கவும் ஒரு கூட்டம் உள்ளது. அவர்கள் பெரியார் பற்றி கூறியிருக்கும் குறிப்புகள் இவைதான்.


90-வது வயதில் _ 180 கூட்டம். 91-வது வயதில் _ 150 கூட்டம். 93-வது வயதில் _ 249 கூட்டம். 94-வது வயதில் _ 229 கூட்டம். வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்) 42 கூட்டம்.

இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன். ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார்.. சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு குழாய் செருகப்பட்டிருக்கும் நிலையிலும் விடாமல் சுற்றுப்பயணம் செய்தார். 

இதையெல்லாம் எந்த ஆட்சியை பிடிக்க செய்தார்? எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்க்க செய்தார்? அவருக்கும் கடவுளுக்கும் வாய்க்கால் தகராறா? மதங்களுக்கும் அவருக்கும் முன் விரோதமா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

என்னா ரஜினி காது கேட்குதா..?