ஞாபகத்தை அதிகரிப்பது கடல் மீனா அல்லது ஆற்று மீனா?

கடல் மீன்களை உணவாக எடுத்துக்கொள்பவர்களுக்கு மற்றவர்களைவிட ஞாபக சக்தி அதிகமாக இருக்கிறது என்பதை ஆய்வு செய்து கண்டறிந்து உள்ளார்கள் நியூசிலாந்தின் மஸ்ஸே யுனிவர்சிட்டி குழுவினர்.


* வஞ்சிரம், சுறா, இறால் போன்ற கடல் உணவுகளை தொடர்ந்து ஆறு மாதங்கள் சாப்பிட்டவர்களின் ஞாபகசக்தி மற்றும் அறிவுக் கூர்மை மேம்பட்டு இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

* மீன்களில் எண்ணெய் வடிவில் உள்ள ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம்தான் ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அமிலம் மனித உடலில் உருவாவது இல்லை.

* இந்த கொழுப்பு அமிலம் மூளை சுறுசுறுப்பாக இருக்கவும், மனநலம் பாதிக்கப்படாமல் தடுக்கவும் செய்கிறது.

ஆற்று மீன்களில் இந்த ஒமேகா கொழுப்புச்சத்தின் அளவு குறைவாக இருப்பாதால், கடல் மீன் சாப்பிடும்போது மட்டுமே ஞாபக சக்தியை மேம்படுத்தும் அளவுக்கு சக்தி கிடைக்கிறது.