எங்கே போனார் ராமதாஸ்? ஸ்டாலின் சவாலுக்குப் பயந்துவிட்டாரா?

முரசொலி இப்போது இருக்கும் இடம் பஞ்சமி நிலம்தான் என்று பலரும் உறுதிபட சொல்லி வருகிறார்கள்.


இது குறித்து ஜி.கே.மணி, தடா பெரியசாமி என்று பலரும் பேசிவந்தாலும், ஸ்டாலின் சவால் விட்ட பிறகு ராமதாஸ் கப்சிப் என்று ஆகிவிட்டார். முரசோலி இருக்கும் இடத்தில் ஆதி திராவிடர் மாணவர் விடுதி இருந்தது உண்மை. அந்த இடம் பஞ்சமி நிலம்தான் என்றும் இந்த பிரச்சினை 1980ம் ஆண்டே எழுந்தது என்றும் சொல்லப்படுகிறது. 

முரசொலி மட்டுமின்றி எல்.ஐ.சி. போன்ற பல்வேறு கட்டிடங்கள் பஞ்சமி நிலத்தில்தான் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது குறித்து வீராவேசமாக பேசிவந்த அய்யா ராமதாஸ் திடீரென ஆஃப் ஆனது ஏன் என்பதுதான் இப்போது பலரது கேள்வி.

பயந்துட்டாரா ராமதாஸ்..