செந்தில் பாலாஜியிடம் சவாலில் தோற்ற விஜயபாஸ்கர்! அமைச்சர் பதவி ராஜினாமா எப்போது?

இந்த அமைச்சரும் இப்படி பேசுவாரா என்று எல்லோரும் ஆச்சர்யப்படும் வகையில் தேர்தல் பிரசாரத்தில் சவால் விட்டார் அமைச்சர் விஜய பாஸ்கர்.


செந்தில் பாலாஜியை கண்டபடியெல்லாம் விமர்சனம் செய்ததுடன் நில்லாமல், செந்தில் பாலாஜி அரவக்குறிச்சியில் நின்றாலும் சரி, கரூர் மக்களவை தொகுதியில் நின்றாலும் சரி, அவர் டெபாசிட் பெற்றுவிட்டால் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என்று வீர வசனம் பேசினார். 

ஆனால், விதி வலியது என்பது போல் அரவக்குறிச்சி தொகுதியில் 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துவிட்டார் செந்தில் பாலாஜி. இவர் ஏற்கெனவே தினகரன் டீமில் இருந்து ஆர்.கே.நகர் தேர்தலை ஜெயித்துக் கொடுத்தவர். அந்த வழியில் அசத்தி ஜெயித்தே விட்டார்.

இப்போது செந்தில்பாலாஜி செய்தியாளர்களைப் பார்க்கும்போதெல்லாம், ‘விஜயபாஸ்கர் எப்போது ராஜினாமா செய்வார் என்று கேட்டுச் சொல்லுங்கள்’ என்று கிண்டல் செய்து வருகிறார். அத்துடன் நில்லாமல், விஜய பாஸ்கர் ராஜினாமா செய்தால் கரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும், அப்போது அ.திமு.க. சார்பில் யாரை வேண்டுமானாலும் நிறுத்துங்கள், தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்’ என்றும் சவால் விடுகிறார்.