எங்கே விஜயபிரபாகரன்? தேடி கலாய்க்கும் தி.மு.க. நெட்டிசன்கள்!

கொஞ்சநஞ்ச பேச்சா பேசினார் விஜயபிரபாகரன். இப்ப எங்கே போய் குடிச்சுட்டு விழுந்துகிடக்காருன்னு தெரியலையே, தெளிஞ்சதும் அரசியல் பக்கம் வரச் சொல்லுங்க என்று தி.மு.க. நெட்டிசன்கள் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.


விஜயகாந்த் ஆயிரம் ஸ்டாலினுக்கு சமம், நூறு ஜெயலலிதாவுக்கு சமம் என்று பேசினார். அது மட்டுமின்றி, நாம இருக்கும் கூட்டணிதான் ஜெயிக்கும். நாம கை காட்டுற ஆளுதான் பிரதமர். தெறிக்க விடலாமா என்று சின்னப் பையனைப் போன்று பேசினார். சிறுவர் வெள்ளாமை வீடு வந்து சேராது என்பதற்கு உதாரணமாகவே மாறிவிட்டது, விஜயபிரபாகரன் பேச்சு. ஆம், விஜயகாந்த் கட்சிக்கு கொஞ்சநஞ்சமிருந்த மரியாதை, மானமும் இப்போது போயே விட்டது. இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு ஓட்டு வங்கி சரிந்துவிட்டது.

விஜயகாந்த் கட்சியினர் நான்கு பேரில் மூன்று பேருக்கு டெபாசிட் போய்விட்டது. அது மட்டுமல்ல, இத்தனை நாளும் கட்டிக் காப்பாற்றிவந்த முரசு சின்னமும் போயே போச்சு என்ற நிலைதான். அடுத்த தேர்தலில் 8 சதவிகித வாக்குகளை வாங்கவில்லை என்றால், கட்சியும் அங்கீகாரத்தை இழந்துவிடும். என்ன செய்யப் போகிறார் விஜய பிரபாகரன்... மீண்டும் தெறிக்க விட வருவாரா என்று காத்திருக்கிறார்கள் உடன்பிறப்புகள்.