நாடு முழுவதும் வேகமாக பரவும் கொரோனா! 1 வாரமாக ஆள் மாயம்..! எங்கே போனார் அமித் ஷா?

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் சூழலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா எங்கே போனார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.


நாடு முழுவதும் கடந்த செவ்வாய் கிழமை நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. அன்று முதல் தற்போது வரை இதற்கான ஏற்பாடுகளை பிரதமர் மோடி நேரடியாக கவனித்து வருகிறார். அனைத்து தரப்பினருடனும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மோடி ஆலோசனை நடத்தி தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை, ஊடக நிர்வாகிகளுடன் விவாரம், மருத்துவர்களுடன் கலந்துரையாடல் என்று தினமும் மோடி கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உண்டு.

கடந்த வாரம் அத்தியாவசிய பொருட்கள் நாடு முழுவதும் தடையில்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்யப்ப்டடுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனா எதிர்ப்பு பணிகளில் கலந்து கொள்ளவில்லை. இதற்கிடையே கடந்த 2 நாட்களாக அமித் ஷா என்ன ஆனார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஊரடங்கு அமலில் உள்ளதால் அமித் ஷா தனது வீட்டில் இருந்தபடியே தனது அலுவல்களை கவனித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பாடகி கனிகா கபூர் என்பவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்றுடன் இரவு விருந்து ஒன்றில் கனிகா கலந்து கொண்டார்.

அந்த நிகழ்வில் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதலமைச்சர் வசுந்த்ரா ராஜே அவரது மகன் துஷ்யந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் துஷ்யந்த் பாஜக எம்பி ஆவார். அந்த வகையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற பாஜக எம்பிக்கள் கூட்டம், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் துஷ்யந்த் கலந்து கொண்டதாக சொல்கிறார்கள்.

எனவே அரசியல் தொடர்புடைய நபர்கள் மூலமாக கொரோனா பரவும் வாய்ப்பு உள்ளதால் தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்றோர் வீடுகளில் இருந்தபடியே பணியாற்றுவதாக கூறப்படுகிறது.