சசிகலா என்று விடுதலை செய்யப்படுவார்..? எடப்பாடியின் விருப்பம் என்ன தெரியுமா?

பா.ஜ.க.வின் அதிகாரபூர்வ பேச்சாளர்களில் ஒருவரான ஆசீர்வாதம் ஆச்சாரி, தனது ட்விட்டர் பதிவில், “திருமதி சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து ஆகஸ்டு 14 ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று தெரிகிறது” என்று பதிவிட்ட விவகாரம் தமிழகத்தில் பற்றி எரிகிறது.


ஏற்கெனவே சுப்பிரமணியம் சுவாமியும், குருமூர்த்தியும் சசிகலா வெளியே வந்தால்தான், அ.தி.மு.க.வுக்கு வலிமை கிடைக்கும் என்ற கருத்து கொண்டவர்கள். அதனால், அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிரார்கள். 

இவர்களது ஆர்வத்தை இப்படி ட்வீட் போட்டு குழப்பத்தை உருவாக்கி, அதில் மீன் பிடிக்க நினைக்கிறார்கள். எந்த காரணம் கொண்டு, சசிகலா வெளியே வந்துவிடக் கூடாது என்பதுதான் எடப்பாடியின் ஒரே ஆசை. அதனை மேலிடத்தில் அழுத்தமாக சொன்ன பிறகும், லோக்கல் பா.ஜ.க.வினர் இதனை வேண்டுமென்றே எடுத்து விளையாடுவதாக நினைக்கிறார்.

பெங்களூரு சிறை வட்டாரத்தில், இதுவரை சசிகலா விடுதலை குறித்து எந்த நடவடிக்கையும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், அபராதத் தொகை கட்டுவது இன்னமும் நிலுவையில் இருக்கிறது.

கொரோனா காலத்திலும், இப்படி பா.ஜ.க. இழுத்துவிட்டு வேடிக்கை பார்ப்பதுதான் அதிர்ச்சியான சம்பவம். சீனாவில் கோட்டைவிட்டதை தமிழகத்தில் பிடிக்கப் போகிறார்களாம்.