82 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட உடல்! ஆனால் சிறுவன் சுர்ஜித் உயிரிழந்தது எப்போது? வெளியான அதிர்ச்சி தகவல்!

சிறுவன் சுர்ஜித் சுமார் 82 மணி நேரத்திற்கு சடலமாக மீட்கப்பட்டாலும் அவன் எப்போது உயிரிழந்தான் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணி அளவில் சிறுவன் சுர்ஜித் தனது வீடு அருகே இருந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தான். சிறிது நேரத்தில் தமிழகமே பரபரப்பானது. சுகாதாரத்துறை அமைச்ச்ர விஜயபாஸ்கரும் அன்றே நடுக்காட்டுப்பட்டி சென்றார்.

அப்போது முதல் இன்று அதிகாலை வரை இடைவிடாமல் மீட்பு பணிகள் நடைபெற்றன. இறுதியில் சுமார் 82 மணி நேரத்திற்கு பிறகு சிறுவன் சுர்ஜித் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

சுமார் 82 மணி நேரம் இரவு பகல் பாராமல் மீட்பு பணிகள் நடைபெற்ற இறுதியில் சிறுவன் சுர்ஜித் உடலை மட்டுமே மீட்க முடிந்தது. இதனிடையே சுர்ஜித் உடல் முழுவதுமாக சிதைந்து போயிருந்தது. மிகவும் சிரமப்பட்டே அவனது உடலை மீட்பு படையினர் மீட்டனர். 

இதனிடையே சுர்ஜித் எப்போது உயிரிழந்தான் என்கிற கேள்வி எழுந்தது. இதற்கு பிரேதப்பரிசோதனை செய்த மருத்துவர்கள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது உடலின் தற்போதைய நிலையை பார்க்கும் போது சிறுவன் இறந்து மூன்று நாட்கள் வரை ஆகியிருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

அதாவத சிறுவன் குழிக்குள் விழுந்த எட்டு மணி நேரத்தில் உயிரிழந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.