அபிநந்தன் மீண்டும் போர் விமானத்தை இயக்குவாரா? விமானப்படை வெளியிட்ட ஷாக் தகவல்!

அபிநந்தன் மீண்டும் எப்போது போர் விமானத்தை இயக்குவார் என்பது குறித்து விமானப்படை விளக்கம் அளித்துள்ளது.


கோவையில் விமானப்படை தலைமை தளபதி பி.எஸ்.தனோவா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் இந்தியாவின் தாக்குதலில் எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த தனாவோ, விமானப்படையின் வேலை இலக்கை குறி வைத்து அழிப்பது என்பது தான் என்றார். அதன்படி குறி வைக்கப்பட்ட இலக்கை விமானப்படை அழித்து ஒழித்ததாக தனாவோ கூறினார்.

தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்து கணக்கெடுப்பது விமானப்படையின் வேலை இல்லை என்றும் தனோவோ தெரிவித்தார். அப்போது விங் கமாண்டர் அபிநந்தன் எப்போது மீண்டும் போர் விமானத்தை இயக்க அனுமதிக்கப்படுவார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த கேள்விக்கும் தனாவோ பதில் அளித்தார். அப்போது அபிநந்தனுக்கு மீண்டும் உடல் பரிசோதனை எடுக்கப்படும் என்றார். அந்த பரிசோதனையில் அவர் தகுதி அடைந்தால் மீண்டும் போர் விமானத்தை இயக்க அனுமதி வழங்கப்படும் என்றார்.

ஆனால் இதற்கு எந்த கால நிர்ணயமும்  கிடையாது என்று கூறி அதிர வைத்தார் தளபதி தனோவா. எனவே தற்போதைக்கு அபிநந்தன் போர் விமானத்தை இயக்கும் வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.