சகல மீடியாக்களும் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என்று றெக்கை கட்டிக்கொண்டு செய்திகள் வழங்கிக்கொண்டிருக்க, அவரது மனைவி லதாவின் செயல் மீண்டும் ஒரு முறை பெரும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
அய்யா ரஜினிகாந்த், எப்போதான் வாடகை கட்டுறதா உத்தேசம்..?
ஆம், ரஜினிகாந்த்தின் மனைவி லதா, தான் நடத்தும் ஆஸ்ரம் பள்ளிக்கான இட வாடகை ரூ.11 கோடியை பல காலமாக செலுத்தாமல் இருந்தார். இது குறித்து இட உரிமையாளர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றனர். வாடகை பாக்கியை செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் லதா ரஜினி பொருட்படுத்தவில்லை.
இட உரிமையாளர்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடவே, தற்போது நீதி மன்றம் புதிய உத்தவிட்டுள்ளது. அதன்படி, வாடகை பாக்கியை செலுத்த வேண்டும்.. வரும் ஏப்ரல் 30க்குள் இடத்தை காலி செய்ய வேண்டும்.. மீறினால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்று எச்சரித்துள்ளது.
இப்பள்ளியை ஒரு அறக்கட்டளை மூலம் நடத்துகிறார் லதா ரஜினி. (அந்த அறக்கட்டளையும் அவருடையதுதான்) அதன் பெயர்... "ஸ்ரீராகவேந்திரா கல்வி அறக்கட்டளை!".
ஆன்மிக அரசியல் என்றால் இப்படித்தான் யாருக்கும் வாடகை கொடுக்க மாட்டாரா ரஜினி..?