சீன தூதரை பேட்டி எடுத்தது ஒரு குத்தமாய்யா..? மோடியின் பாய்ச்சல் பயங்கரமா இருக்கே.

இந்தியாவின் மிகப்பெரிய பத்திரிகை நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா எனப்படும் பி.டி.ஐ.யை மிரட்டி பணியவைக்கும் முயற்சியில் மத்திய அரசின் பிரசார் பாரதி இறங்கியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைவர் ஓ.எம்.ஏ. ஸலாம், ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பி.டி.ஐ.க்கு எதிராக பிரசார் பாரதி நடவடிக்கை எடுப்பதென்பது நாட்டில் பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் மற்றொரு முயற்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய பத்திரிகை நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவை, நாட்டின் “தன்னாட்சி” பொது ஒளிபரப்பாளரான பிரசார் பாரதி, சீன தூதரின் நேர்காணலை வெளியிட்டதற்காக “தேசிய நலனுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும்” கூறி அச்சுறுத்தியுள்ளது. இதன் மூலம் பி.டி.ஐ-க்கு தனது சந்தாவை திரும்பப் பெறுவதாக அச்சுறுத்திய ஒரு கடிதத்தை பிரசார் பாரதி அனுப்பியுள்ளது.

இந்த நடவடிக்கையை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தொடர்ந்து வரும் பத்திரிகை சுதந்திரத்தைத் தடுக்கும் தீய செயல்முறையின் ஒரு பகுதிதான் இது. 

இந்த அரசாங்கம் வெகுஜன ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், அரசாங்கத்திற்கு ஆதரவாக இணக்கத்தை உருவாக்குவதற்கும், ஊடகங்களில் இருந்து கருத்து வேறுபாட்டின் அனைத்து குரல்களையும் அகற்றுவதற்கும் ஒரு தீவிரமான போக்கை வெளிப்படுத்துகிறது. கீழ்ப்படிய மறுத்த சுயாதீன ஊடக ஏஜென்சிகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தங்கள் அரசியலமைப்பு உரிமைகளை மறுத்து துன்புறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டனர். 

இந்த செயல்பாட்டில் பல தேசிய மற்றும் பிராந்திய ஊடக நிறுவனங்கள் கொல்லப்பட்டன. அனைத்து பத்திரிகை நெறிமுறைகளையும் அடகு வைத்து அரசோடு ஒத்துழைத்து, அரசு செய்யும் அநியாயங்களை கண்டு மௌனமாக கடக்கும் ஊடகங்கள் தான் மரியாதையாக நடத்தப்படுகிறது. சீன தூதரின் பேட்டியை ஒளிபரப்பியது தேச நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் என கூறி பிரதம மந்திரி நிவாரண நிதிக்காக சீன நிறுவனங்களிடமிருந்து நிதியை பெறுவதை அவ்வாறு குறிப்பிடாதது விசித்திரமானது என்று கேளி எழுப்பியுள்ளார்.