சந்தனத்தை உடலில் தேய்த்துக் குளித்தால் என்னாகும்? அழகின் ரகசிய குறிப்பு !!

பூஜைகளில் மட்டுமின்றி தினமும் உடலில் பூசுவதற்கும் சந்தனம் பயன்படுகிறது. இலையுதிர் காடுகளில் அதிகம் காணப்படும் சந்தன மரம், தானே வளரக்கூடியதாகும்.


சந்தன மரத்தின் கட்டை நறுமணம் உடையது மட்டுமின்றி மருத்துவப் பயன் நிறைந்தது. இந்த மரத்தை அரசு அனுமதி பெற்றுத்தான் வளர்க்கவும் விற்பனை செய்யவும் முடியும்.

• சந்தனம் உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது. வியர்வையை மட்டுப்படுத்தி உடம்புக்கு மணம் தரக்கூடியது.

• சந்தனத்தால் செய்யப்பட்ட ஊதுபத்தியை வீட்டில் ஏற்றிவைத்தால் நறுமணம் கமழ்வதுடன் தொற்றுக் கிருமிகளை தடுக்கவும் செய்யும்.

• சந்தனக் கட்டையை எலுமிச்சை சாறுடன் கலந்து அரைத்து தடவினால் முகப்பரு, கரும்புள்ளி போன்ற பிரச்னைகள் தீரும்.

• சந்தனத்தை உடலில் தேய்த்து குளித்துவந்தால் நரம்புகள் பலமடையும். சுறுசுறுப்பும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

போலியான சந்தனக் கட்டையை பயன்படுத்தினால் உடம்புக்கு ஆபத்து உண்டாகலாம், அதனால் அசல் சந்தனக் கட்டையை தேர்வு செய்து வாங்கி பயன்படுத்த வேண்டும்.