என்ன செய்வது ராமோகன்ராவ் போன்ற அதிகாரிகளை..? ஜாதி சங்கம் பஞ்சாயத்து.

அரசு அதிகாரிகள் என்றால் தங்கள் ஜாதி, மதம் மறந்து நாட்டு மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், அப்படி நடக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


ஏனென்றால் சமீபத்திய செய்தித்தாளில், 'தமிழகத்தில் வாழும் நாயுடு சொந்தங்களே திருமலைநாயக்கரின் 437ஆவது பிறந்தநாளில் ஒன்றினைவோம்’ என்று ஒரு முழுப்பக்க விளம்பரம் கொடுத்து பரபரப்பைக் கொடுத்திருக்கிறார், தமிழக முன்னாள் தலைமைச் செயலர் ராம் மோகன் ராவ் ஐ.ஏ.எஸ்.

பதவியில் இருந்தபோது தன்னுடைய அலுவலகம் வரை ரெய்டு வருவதற்கு காரணமாக இருந்தவர் என்ற பெருமை இப்போதும் அன்னாருக்கு உண்டு. இந்த நிலையில், தன் மீதுள்ள வழக்குகளில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளவும், பொதுமக்களிடம் தன்னை வளர்த்துக்கொள்ளவும், புதிய ஜாதி சங்கத்தை தொடங்கியுள்ளார்.

இப்படி ஒரு சங்கம் தொடங்கும் அளவுக்கு ஜாதி வெறியாராக இருப்பவர், அவருடைய பதவிக் காலத்தில் ஜாதிக்காக என்னவெல்லாம் செய்திருப்பார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதனால், அவர் உத்தரவிட்ட ஃபைல்களை எல்லாம் ஆய்வு செய்யவேண்டியது அவசியம் ஆகும் என்று தமிழக மக்கள் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

இப்படிப்பட்ட ஒருவரை உயர் அதிகாரியாக நியமனம் செய்த ஜெயலலிதாவைத்தான் சொல்ல வேண்டும்!