என்னது ரெட் அலர்ட்டா? நாங்க எப்போ கொடுத்தோம்? ஜகா வாங்கிய வானிலை மையம்!

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.


நேற்று தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வட தமிழக கடற்கரையில் இருந்து தென் கிழக்கில் சுமார் 1500 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது . அடுத்து வரும் 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இது மாறும்.

தற்போதைய நிலவரப்படி இது வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வடதமிழக கடற்கரைக்கு அருகில் வரக் கூடும் இதனால் மீனவர்கள் இன்றும் நாளையும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளிலும், 28 முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் ..

கனமழை பொருத்தவரையில் ஏப்ரல் 30ஆம் தேதி வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது  இதில் மாற்றங்கள் நிகழலாம். காற்றழுத்த தாழ்வு மண்டலம்தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.  ரெட் அலர்ட் என்பது வானிலை மையத்தால் கொடுப்பது இல்லை. கனமழை என்றால் சிவப்பு நிறத்தில் கொடுக்கப்படும் அவ்வளவே  நிர்வாகத்துறையின் தேவைகளுக்காக பிற துறையில் ரெட் அலர்ட் கொடுக்கப்படுகிறது

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வைப்பொறுத்தே மழை அளவு தெரியும், நகர்வில் தொடர்ந்து மாற்றங்கள் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.