தமிழ் கலாசாரத்தின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் வேட்டி, சட்டையுடன் பாரதப்பிரதமர் நரேந்திரமோடி சீன பிரதமரை சந்தித்தார்.
மோடி படத்தைப் பயன்படுத்தி விளம்பரம்! வேட்டி கம்பெனிக்கு என்ன தண்டனை? பாரதப்பிரதமர் என்ன ஆண் மாடலா?
ஆனால், அதனை தங்கள் விளம்பரத்துக்கு பயன்படுத்திக்கொண்ட நிறுவனம் மீது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதே போன்று ஏற்கெனவே மோடி படத்தைப் போட்டு விளம்பரம் செய்த காரணத்தால், ரிலையன்ஸ் நிறுவனம் வருத்தம் தெரிவித்த வரலாறு உண்டு. அது தெரிந்தும் எப்படி மோடி வேட்டியை விளம்பரத்துக்குப் பயன்படுத்த முடியும்?
இன்னொரு தகவல் தெரியுமா? சீன ஜனாதிபதி ஜிங் பிங் புகைப்படம், பெயரை யாரும் எதற்காகவும் பயன்படுத்தக்கூடாது என்று ஒரு சட்டமே அந்த நாட்டில் உண்டு. சீன ஜனாதிபதி நெருங்கிய உறவினர் மற்றும் சொந்த மகன் கூட அவர் என் உறவினர் என்று கூறி குடும்ப விழாவில் எடுத்து புகைப்படத்தை அல்லது வெறும் குடும்ப பெயரை கூட அவர்கள் நாட்டு சமூக வலைதளத்தில் பதிவேற்ற முடியாது.
நம் இந்தியாவிலும் தேசிய சின்னங்கள், கொடி, நம் நாட்டு தலைவர்கள் ஆகியோர் புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் உண்டு. இத்தனை கட்டுப்பாடுகள் இருப்பது தெரியாமல், ஆதாயத்துக்காக விளம்பரத்துக்கு பிரதமரை பயன்படுத்துவது என்ன நியாயமோ? அந்த நிறுவனத்துக்கு என்ன தண்டனை கிடைக்குமோ?