முஸ்லீம் மக்கள் கேட்பது என்ன...? எடப்பாடி கொடுப்பது என்ன?

தமிழகம் முழுவதும் இன்று இஸ்லாம் மக்கள் ஒன்றிணைந்து குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகப் போராடி வருகிறார்கள்.


 தமிழகத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை அமுல்படுத்த மாட்டோம் என்று திர்மானம் நிறைவேற்ற முஸ்லீம் மக்கள் வேண்டுகிறார்கள். இந்த நிலையில் நேற்று, ‘ஒரே ஒரு முஸ்லீமாவது பாதிக்கப்பட்டுள்ளாரா?’ என்று கேள்வி எழுப்பினார் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அதாவது, வீடியோ, ஆடியோவாக கிண்டலும் கேலியும் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று, ‘இஸ்லாம் மக்களுக்கு ஆதரவாக சில திட்டங்களை அறிவிப்பு செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

அதன்படி, உலமாக்களுக்கு ஓய்வூதியம் ரூ.1500-லிருந்து, ரூ.3000-மாக உயர்வு, உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் நிதி. ஹஜ் பயணிகளுக்கு, சென்னையில் ரூ.15 கோடியில் தங்கும் இல்லம் கட்டித் தரப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பினால் இஸ்லாமியர்களுக்கு சந்தோஷம்தானே என்று கேட்டால், ‘‘மேலூருக்கு வழி கேட்டால் கீழுக்கு வழி சொல்கிறார் எடப்பாடி‘ என்று கோபமாகிறார்கள். என்னப்பா, இப்படி ஆகிடுச்சே.