ஜெயக்குமார் இப்ப அப்படித்தான் சொல்லுவார்,நாளை இது மாறும்! கருணாஸ்!

புதுக்கோட்டையில் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த கருணாஸ் கலகலப்பாக பேசினார்.


அமைச்சர் மணிகண்டன் நீக்கப்பட்ட பிறகு தைரியமாக அடிக்கடி ஊர்பக்கம் வருகிறார் கருணாஸ்.நேற்று அப்படி ஒரு வரவின்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடப்பணிகள் பாதியில் நிற்பதற்கு ஐசரி கனேஷ் , விஷால் இடையிலான தனிப்பட ஈகோ மோதல்தான் காரணம் என்று குற்றம் சாட்டினார் கருணாஸ்.

அது போலவே வேதாரணியம் வன்முறை சம்பவங்கள் குறித்துப் பேசிய நடிகர் கருணாஸ்,தமிழக காவல்துறை ஒரு தரப்பினர் மீதுமட்டுமே நடவடிக்கை எடுத்து வருவதாகவும்,ஆயுதங்களோடு வந்த இன்னொரு தரப்பினரை உடனே கைது செய்யவேண்டும்.

இல்லாவிட்டால் அவரது தலைமையில் வேதாரண்யத்தில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் என்னை அமைச்சராக்கி இருப்பார்.

சசிகலா தினகரன் இருவருக்கும் இனி அதிமுகவில் இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசிவருவதை குறிப்பிட்ட கருணாஸ்,இதெல்லாம் நீண்டநாள் நிலைக்காது அவரது நிலைப்பாட்டில் விரைவில் மாற்றம் வரும் என்று தெரிவித்திருக்கிறார்.