தோழர் மருதையன் வெளியேறக் காரணம் பார்ப்பனர் விமர்சனமா..? ம.க.இ.க.வில் திடுக் சம்பவம்... இழுத்து மூடப்படும் வினவு இணையதளம்

கிட்டத்தட்ட 35 வருடங்கள் மக்கள் கலை இலக்கியக்கழகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்த தோழர் மருதையனும் மேலும் சிலரும் திடீரென அந்த அமைப்பில் இருந்து விலகியிருக்கிறார்கள். கட்சித் தலைமையின் அழுத்தம் காரணமாகவே விலகுவதாக அறிவித்துள்ளார்.


கம்யூனிசத்தில் பெரியாரையும் அம்பேத்காரையும் கொண்டுவந்ததாக குற்றம் சாட்டப்பட்டதுடன், பிராமணர் என்பதும் திடீரென ஒரு அம்சமாக மாற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் அவர் சிறப்புற கொண்டுவந்த வினவு இணையதளமும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து குறித்து அந்த தளத்தின் அறிவிப்பு இது. 

தாழர்கள் மருதையன், நாதன் ஆகியோரது விலகல் கடிதத்தை வெளியிட்டிருந்தோம். வினவு ஆசிரியர் குழு அவ்வாறு வெளியிட்டதற்கு முழுப் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறது. இதன் பொருட்டு அமைப்பின் தலைமை எங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமானால் அதனை எதிர்கொள்கிறோம்.

வினவு தளத்தில் பன்னிரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம். அமைப்பு சார்புள்ள தளங்கள், தோல்வியுறும் சூழலில், வினவு ஒப்பீட்டளவில் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழ் இணையச் சூழலில் வினவு தளம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை இங்கே விரித்துக் கூற விரும்பவில்லை. 

இன்று அமைப்பின் முகமாக அறியப்படும் வினவு தளம், 12 ஆண்டுகளுக்கு முன் ஓரிரு தோழர்களின் சொந்த முயற்சியில் ஒரு வலைப்பூவாக தொடங்கப்பட்டது. இதற்காகப் பணியாற்றிய தோழர்களின் முயற்சியின் வழியே, வினவு ஒரு இணைய தளமாக வளர்ந்தது.

நாங்கள் அமைப்புக்கு நிதிச்சுமையைக் கூட அளிக்காமல் சுயசார்பாகவும் வாசகர்களைச் சார்ந்துமே இயங்கி வந்திருக்கிறோம். கடந்த 12 ஆண்டுகளில், அமைப்புக்கும் சமூகத்துக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கிறோம். இனிமேலும், இந்த தளத்தை இயக்கவோ, இதன் ஆசிரியர் குழுவாகப் பணியாற்றவோ நாங்கள் விரும்பவில்லை. ஆசிரியர் குழு பொறுப்பிலிருந்து நான்கு தோழர்களும் விலகுகிறோம்.

உரிய தோழர்கள் வந்தால், தளத்தை ஒப்படைக்கத் தயாராக இருக்கிறோம். இதுவரை எம்மை ஆதரித்த வாசகர்களுக்கும், தோழர்களுக்கும் நன்றி. விடைபெறுகிறோம், வாசகர்களே என்று அறிவித்துள்ளனர்.

தோழர்களுக்கு கடும் நெருக்கடிதான்.