வாக்குப் பதிவு எந்திரங்கள் திடீர் இடமாற்றம்! தமிழக அரசியலில் என்னதான் நடக்கிறது?

அப்பாவியாகத் தெரிகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அவர் சொன்னபடியெல்லாம் தேர்தல் ஆணையம் நடப்பதாக சொல்லப்படுகிறது. தேர்தல் விவகாரங்கள் குறித்து இப்போது வலைதளத்தில் 10 கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த கேள்விகளில் எல்லாமே சரியாகவே தெரிகிறது. என்னதான் செய்கிறது தேர்தல் ஆணையம்?


தேர்தல் நடவடிக்கை தொடர்ந்தபிறகு தி.மு.க.வுக்கு நெருக்கமான ஆட்கள் மீது மட்டும் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது ஏன்? கோவையில் இருந்து தேனிக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்லப்பட்டது ஏன்? மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் வட்டாட்சியர் நுழைந்தது ஏன்?

தமிழகத்தில் கள்ளவாக்குப் பதிவான இடங்களில் நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை? ஆயிரக்கணக்கான திமுக ஆதரவு வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து ஏன் நீக்கப்பட்டது? பத்து வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த பரிந்துரை செய்தார் மாநில தேர்தல் அதிகாரி. ஆனால், அதுகுறித்து தேர்தல் ஆணையம் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?

வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சி பணம் கொடுத்ததை ஏன் தடுக்கவில்லை.. ஏன் யாருமே பிடிபடவில்லை? பணப்பட்டுவாடாதான் வேலூர் தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு காரணம் என்றால் தேனியில் ஏன் தேர்தல் நிறுத்தப்படவில்லை?

ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவருக்கு ஏன் தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்டது? ஆளும் கட்சி மீது எதிர்கட்சிகள் அளித்த புகார்கள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? இதற்கெல்லாம் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ன?