நெல்லை முன்னாள் மேயர் கொலையில் உண்மையில் நடந்தது என்ன?

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவர் கணவர் முருகு சந்திரன், பணிப்பெண் மாரி ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை ஆதாயக் கொலை என்று போலீஸ் முடிக்கப் பார்க்கிறது.


ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் பலரும் பேசுகிறார்கள். ஏனென்றால் ஒரு முன்னாள் மேயர் வீட்டில் போய் யாரும் தைரியமாக கொள்ளையடிக்க துணிய மாட்டார்கள், அதுவும் பட்டப் பகலில் கொலை நடந்திருக்கிறது.  மேயரையும், அவரது கணவரையும் கொலை செய்யும் போது வேலைக்காரி பார்த்து இருக்கிறார், அதனால் வேலைக்காரியையும் கொன்று விட்டார்கள், அப்படியானால் வேலைக்காரிக்கும் பரிச்சயமான முகமாக இருப்பவர்தான் இவர்களை கொலை செய்திருக்கிறார் என்று அர்த்தம்.

3 கொலைகள் ஒரே நேரத்தில் நடந்திருக்கிறது என்றால் குறைந்தபட்சம் 6க்கும் மேற்பட்ட நபர்கள் இருந்தால்தான் 3 பேரை கொலை செய்திருக்க முடியும். பொதுவாக நகை, பணம் திருட வருகிறவர்கள் 1க்கும் மேற்பட்டவர்கள்  வரமாட்டார்கள். "கல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர்" என்பதுதான் திருநெல்வேலி பழமொழி ஆகையால் குரூப்பாக சேர்ந்து திருடுகிற பழக்கம் திருநெல்வேலி காரங்க கிட்ட கிடையாது. நிச்சயமாக இந்த கொலை ஆதாயக்கொலை இருக்க வாய்ப்பில்லை, வேறு ஏதாவது காரணமாக இருக்கலாம்

இந்தக் கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த பணிப்பெண் மாரியம்மாளின் குடும்பம் தற்போது நிர்க்கதியாய் நிற்பதுதான் வேதனை. மாரியம்மாளுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். வீரலெட்சுமி, ஜோதிலெட்சுமி, ராஜேஸ்வரி ஆகிய மூவரும் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 12, 10, 8 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். 10 வருடங்களுக்கு முன்பே கணவர் நோய்வாய்ப்பட்டு இறந்த நிலையில் மாரியம்மாள்தான், தன் பிள்ளைகளை படித்து வைத்து வந்துள்ளார்.

வாடகை வீட்டில் தங்கிக்கொண்டு ஓய்வின்றி பல வீடுகளின் பணிப்பெண்ணாக மாரியம்மாள் உழைத்ததாகவும், தான் படிக்காத படிப்பை தன்னுடைய பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டுமென்றும் அவர் விரும்பியதாகவும் அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர். மூன்று பெண் பிள்ளைகளின் கல்விக்காக உழைத்துக்கொண்டே இருந்த மாரியம்மாள் இன்று இல்லை என்பது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்களுடைய தாயும் இறந்துவிட்ட நிலையில் எதிர்காலம் குறித்த பல கேள்விகளுடன் செய்வதறியாது 3 பெண் குழந்தைகளும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தி.மு.க. கட்சிதான் இவர்களுக்கு உதவ வேண்டும்.